For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி கோரிக்கையை ஏற்று மகள்களுடன் அன்பை பொழிந்து போட்டோ எடுத்த தந்தைகள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளை ஏற்று தங்களது பெண் குழந்தைகளுடன் தந்தையர்கள் செல்ஃபி போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் நிரப்பி தள்ளிவிட்டனர்.

பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டும், அவர்களின் கல்வி அவசியத்தை வலியுறுத்தியும், பெண் பிள்ளைகளுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளங்கள் மூலமாக, தன்னுடன் ஷேர் செய்யுமாறு பிரதமர் மோடி வானொலி மூலம் கேட்டுக்கொண்டார்.

Thousands of fathers take to Twitter to post selfies with daughters in India

இதையடுத்து, நாடு முழுவதிலுமுள்ள மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுடன் போட்டோ எடுத்து அதை ஷேர் செய்தனர்.

அரசியல் பிரமுகர் விஜய் கோயல் தனது மகளுடன் எடுத்த போட்டோவின் கீழே, "எனது மகள், எனது நம்பிக்கையின் தூண்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கவுரவ் என்பவர், சொர்க்கத்தில் இருந்து வந்த தேவதைகள்தான் மகள்கள். மகள்கள் கடவுளின் ஆசிர்வாதங்கள்.. என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹமீத் நகாதா என்பவர் கூறுகையில், நீ சிரிக்கும்போதுதான், நானும் சிரிக்கிறேன். மகள்கள், மகன்களை விட ஒருபடி மேல் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Fathers all over the country immediately started posting photos with their daughters along with heart-warming tributes to support the 'Beti Bachao, Beti Padhao' campaign, which translates roughly as 'Save girl child, educate girl child'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X