காப்பகத்தில் கொடுமையான முறையில் பலாத்காரம்.. 3 சிறுவர்கள் பலி.. உரிமையாளர் கைது!
மத்தியப்பிரதேசத்தில் இயங்கும் தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் 3 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
Recommended Video

போபால்: மத்தியப்பிரதேசத்தில் இயங்கும் தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் 3 சிறுவர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தனியார் சிறுவர்கள் காப்பகம் ஒன்று அரசு நிதி பெற்று 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 2003 ல் இருந்து 42 சிறுவர்கள் மற்றும் 58 சிறுமிகள் தங்கி உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் நான்கு ஆசிரியர்கள் இருந்த காப்பகத்தில் முழு நேரமும் வார்டன்களாக காப்பகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார்.

காப்பகங்களில் சோதனை
இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் காப்பகங்கள், தங்குமிடங்கள் மற்றும் அனாதை இல்லங்களை சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். மேலும் தனியார் பெண்கள் விடுதிகளுக்கு வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

விசாரணை
இதைத்தொடர்ந்து காப்பகங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி வந்தது. இந்நிலையில் போபாலில் உள்ள காப்பகம் ஒன்றில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் அங்குள்ள சிறுவர் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.

கொடுமையான பலாத்காரம்
அதில் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அந்த காப்பகத்தின் உரிமையாளரால் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் கொடுமையான பலாத்காரத்தால் மூன்று சிறுவர்கள் பலியாகியுள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

மூன்று சிறுவர்கள் பலி
காப்பகத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டதால் அதிகப்படியான இரத்தப்போக்கில் சிறுவன் ஒருவன் இறந்து உள்ளான் . மற்றொருவன் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்து உள்ளான். மூன்றாவதாக ஒரு சிறுவன் கடும் குளிரில் இரவு முழுவதும் வெளியே நிற்க வைத்ததால் இறந்ததாக அங்கு தங்கியுள்ள சிறுவர்களும், சிறுமிகளும் புகார் அளித்து உள்ளனர்.

போலீசார் வழக்குப்பதிவு
காப்பகத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களும், இரண்டு சிறுமிகளும் இதுதொடர்பாக சமூக நீதித்துறைக்கு சென்று தங்கள் புகாரை அளித்துள்ளனர். இந்த புகாரை சமூக நீதித்துறை போலீசுக்கு அனுப்பி வைத்து உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

உரிமையாளர் கைது
பாலியல் பலாத்காரத்துக்கு ஒத்துழைக்காத சிறுவர் சிறுமிகள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றும் காப்பகத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காப்பக உரிமையாளரான 70 வயது முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications