3 அடுக்குமாடி கட்டடம்.. 30 வினாடிகள் வீடியோ.. மேற்கு வங்கத்தில் சீட்டுக் கட்டு போல் சரிந்த கட்டடம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மிட்னாபூர் மாவட்டத்தில் 3 அடுக்கு கட்டடம் ஒன்று சீட்டுக் கட்டு போல் சரிந்து பாசன கால்வாயில் விழும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
மிட்னாபூர் மாவட்டம் தாஸ்பூரில் நிச்சிந்தாபூர் கிராமத்தில் பாசன கால்வாய் அருகே 3 அடுக்கு மாடி கொண்ட கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்வாயின் அருகே நடைபெறும் கட்டட பணியால் மண் அரிப்பு ஏற்பட்டு கட்டடம் பலவீனமடைந்தது.

இந்த நிலையில் கால்வாயின் அருகே சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதால் இந்த கட்டடம் மேலும் வலுவிழந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டடத்தில் விரிசல் விட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் அந்த கட்டடம் சரிந்து விழுந்தது.
இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. சுமார் 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் அந்த கட்டடம் சீட்டுக் கட்டு போல் சரிந்து விழும் காட்சிகளும் புகை மண்டலம் போல் தூசி பறக்கும் காட்சிகளும் பதைபதைக்கின்றன.












Click it and Unblock the Notifications