27 ஆண்டுக்கு முந்தைய ஊழல் வழக்கு- முன்னாள் மத்திய அமைச்சர் துங்கானுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை!
டெல்லி: 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பி.கே.துங்கானுக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம்.
1988 ஆம் ஆண்டு மத்திய நகர்ப்புற இணை அமைச்சராக இருந்தவர் பி.கே. துங்கன். இவர் 1975 முதல் 1979 ஆம் ஆண்டு வரை அருணாசலப் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக பதவி வகித்தவர்.

நாகலாந்து மாநில நீர்த்தேக்கங்களை புதுப்பிக்க ஒதுக்கப்பட்ட மத்திய அரசு ஒதுக்கிய ரூ2 கோடியில் முறைகேடு செய்ததாக துங்கான் உட்பட 4 பேர் மீது 1988-ல் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 1994-ம் ஆண்டு துங்கன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 17 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் துங்கான் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 69 வயதாகும் துங்கன் உட்பட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று வெளியிடப்படும் கூறப்பட்டிருந்தது. டெல்லி சி.பி.ஐ. தனிநீதிமன்றம் இன்று துங்கானுக்கு 4 ஆண்டுகள் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. மேலும் ரூ10 ஆயிரம் அபராதமும் விதித்தது.
எஞ்சிய 2 குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனையும் மற்றொரு குற்றவாளி மகேஷ் மகேஷ்வரி என்பவருக்கு 2 ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications