திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு எதுவும் இல்லை.. உறுதி செய்த சிபிஐ! குற்ற பத்திரிக்கையில் தகவல்
அமராவதி: திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பான வழக்கின் இறுதிக் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் லட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்திருப்பது உண்மை தான் என்றாலும் அதில் மாட்டுக் கொழுப்பு அல்லது வேறு எந்தவொரு கொழுப்பும் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 16 மாதங்களுக்கு முன்பு, 2024இல், ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் புனிதமான திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பால் கலப்படம் செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டியது தேசியளவில் பரபரப்பானது.. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, 2024 அக்டோபரில் வழக்கு குறித்து விசாரிக்க சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

மாட்டுக் கொழுப்பு இல்லை
அதன்படி வழக்கை விசாரித்த சிபிஐ இப்போது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் நெய்யில் கலப்படம் இருந்தாலும் மாட்டுக் கொழுப்பு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு அல்லது வேறு எந்த விலங்கு கொழுப்பும் இல்லை என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. நெல்லூரில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் ஜனவரி 23ம் தேதி இந்தக் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.
சிபிஐ குற்றப்பத்திரிகையின்படி, லட்டு தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட நெய், உண்மையில் தாவர எண்ணெய்கள் மற்றும் பால் பொருட்களின் பண்புகளை ரசாயன ரீதியாகப் பிரதிபலிக்கும் ஆய்வக எஸ்டர்களுடன் கலப்படம் செய்யப்பட்டது. இதில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. உத்தரகாண்ட்டின் பகவான்ப்பூரில் உள்ள போலா பாபா ஆர்கானிக் டைரி நிறுவனம் விர்ச்சுவல் உற்பத்திப் பிரிவாகச் செயல்பட்டது அம்பலமானது.
போலி நெய்
இந்த போலா பாபா டைரி, 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை தனது மையத்தில் பால் அல்லது வெண்ணெய் கொள்முதல் செய்யாமலேயே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குக் குறைந்தது 68 கிலோ நெய்யை விநியோகித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பால் கூட பயன்படுத்தப்படாமல் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இந்த நெய்யின் மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கெமிக்கல்கள்
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI மேற்கொண்ட ரசாயன ஆய்வில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தரக்கட்டுப்பாட்டு விதிகள் எப்படி மீறப்பட்டன என்பது கண்டறியப்பட்டது. நெய்யின் தூய்மையைச் சரிபார்க்கக் கோயில் நம்பியிருந்த ரீச்செர்ட்-மெய்சல் (RM) டெஸ்ட்டை ஏமாற்ற, பாமாயில், பனை கர்னல் எண்ணெய், பாமோலீன் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. கொல்கத்தாவைச் சேர்ந்த பட்ஜ் பட்ஜ் கோ லிமிடெட் நிறுவனத்திடமிருந்து இதை வாங்கியுள்ளனர். நெய்யின் தங்க மஞ்சள் நிறத்திற்காக பீட்டா கரோட்டின் சேர்க்கப்பட்டதோடு, நெய்யின் அசல் வாசனையைப் பிரதிபலிக்கச் செயற்கை சுவையூட்டிகளும் பயன்படுத்தப்பட்டன.
விலங்கு கொழுப்பு எதுவும் இல்லை
2024இல் சந்திரபாபு நாயுடு "எஸ்-வேல்யூ" மாறி இருப்பதைச் சுட்டிக்காட்டியே விலங்கு கொழுப்பு இருப்பதாகக் கூறியிருந்தார். இருப்பினும், தாவர எண்ணெய்களும் ரசாயன எஸ்டர்களும் தான் எஸ் வேல்யூ மாற காரணம் என்றும் விலங்கு திசுக்கள் இல்லை என்றும் குற்றப்பத்திரிகை தெளிவுபடுத்துகிறது.
இந்த நெய் கலப்பட விவகாரத்தில் 36 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் பொது மேலாளர் (கொள்முதல்) சுப்பிரமணியம் முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து வந்த ஒப்பந்தங்களுக்கு வேண்டும் என்றே ஒப்புதல் அளித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பண்ணை நிபுணர் விஜய பாஸ்கர் ரெட்டி, தேவஸ்தான தலைவரின் முன்னாள் உதவியாளர் சின்னா அப்பன்னா மற்றும் போலா பாபா நிறுவனத்தின் இயக்குநர்களான போமில், விபின் ஜெயின் ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications