மமதா கட்சி சுவேந்து அதிகாரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்-அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் ஐக்கியம்?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுவேந்தி அதிகாரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்துவதில் பாஜக முனைப்புடன் உள்ளது.

இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை வளைத்துப் போடுவதில் பாஜக தீவிரமாகவும் உள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தொடர்ந்து கலகக் குரல் எழுப்பி வந்தார்.
இதன் அடுத்த கட்டமாக இன்று எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் மேற்கு வங்கத்துக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி, பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது; பாஜகவின் இந்த கனவு ஒருபோதும் நடக்காது என மமதா பானர்ஜி கடுமையாக கூறியுள்ளார். சுவேந்து அதிகாரியை முன்வைத்து மேற்கு வங்க அரசியலில் புதிய பிரளயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications