கொடுமையிலும் கொடுமை.. 50 எம்பி இருந்து என்ன பயன்… அரை நிர்வாணத்தில் டெல்லி ரோட்டில் விவசாயிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 3 நாட்களாக போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தின் 3வது நாளான நேற்று விவசாயிகள் அனைவரும் இடுப்பில் இலைதழைகளை கட்டிக் கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

நடுரோட்ல் படுத்து…

நடுரோட்ல் படுத்து…

கொளுத்தும் டெல்லி வெயிலில் நடுரோட்டில் சட்டை எதுவும் இல்லாமல் படுத்து புரண்டு கொண்டிருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மண் சட்டிகளை அருகில் வைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரர்கள் போல் இலை தழைகளை உடுத்திக் கொண்டு அவர்கள் போராடும் விதத்தை பார்க்கும் போதே நெஞ்சு பதைபதைக்கிறது.

தீக்குளிப்பு

தீக்குளிப்பு

இதற்கிடையே, போராட்டக்காரர்களில் சிலர் தீக்குளிக்க நேற்று முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அவர்கள் விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியிருக்கிறார்கள்.

மயங்கி விழுந்த விவசாயிகள்

மயங்கி விழுந்த விவசாயிகள்

கடும் வெயிலில் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்திய விவசாயிகளில் 4 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். சின்னசாமி, ராமசாமி, ராமலிங்கம், சதாசிவம் என்ற அந்த விவசாயிகள் கடும் வெயிலில் உண்ணாவிரதம் இருந்ததால் இந்த பரிதாப நிலைக்கு ஆளானார்கள். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

என்ன செய்கிறார்கள் 50 எம்பிக்கள்?

நடுரோட்டில் பிச்சை எடுத்தும், வெயிலில் படுத்து உருண்டும், பச்சை இலை தழைகளை மேலாடையாக உடுத்திக் கொண்டும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விவசாயிகளுக்காக தமிழகத்தை ஆளும் கட்சியில் உள்ள 50 எம்பிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.


அதிகாரத்திற்காக அடித்துக் கொள்வதற்கே சரியாக இருக்கிறது..

அவர்கள் அதிகாரத்திற்காக அடித்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அவர்களுடைய சொந்தப் பிரச்சனைகளை ஓரம் கட்டிவிட்டு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விவசாய அமைப்பினரும் பொதுமக்களும் கோரியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu farmers staged a protest to CMB in Delhi.
Please Wait while comments are loading...