பாம்பாற்றின் குறுக்கே அணை: கேரளாவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
டெல்லி: பாம்பாற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம் பட்டிசேரியில் 2 டிஎம்சி நீரைத் தேக்கிவைக்கும் வகையில் பாம்பாற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அமராவதி அணையானது 1959ல் கட்டப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட மூணாறு பகுதியில் பெய்யும் மழை நீரானது, பாம்பாற்றின் வழியாக அமராவதி அணைக்கு வந்து சேர்கிறது. அமராவதி அணையின் மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் 63 ஆயிரத்து 500 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது.
இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக அமராவதி ஆற்றில் உள்ள 15 தடுப்பணைகள் மூலமாக 25 வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு போக சாகுபடிக்கு 18 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், அணைக்கு தற்போது 12 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் தலைமடையைத் தவிர மற்ற பகுதிகளில் ஒரு போக சாகுபடிக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது தவிர அமராவதி ஆற்றில் திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு 25க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் இத்திட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள அரசு அமராவதியின் முக்கிய நீராதாரமான பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு செய்து, பணிகளை துவக்கி உள்ளது.
பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டி, அமராவதி அணைக்கு வரும் தண்ணீரை தடுத்தால் பாசனப்பகுதிகள் அழிந்து போவதோடு, குடிநீர் கிடைக்காமல் பல லட்சம் மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பது தமிழக மக்களின் அச்சம். எனவே கேரளா அரசு அணை கட்டுவதை தடை செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில் பாம்பாற்றின் குறுக்கே கேரள அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் உமாபாரதி இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இடுக்கி மாவட்டம் பட்டிசேரிப்பட்டியில் பாம்பாற்றின் கேரள அரசு குறுக்கே தடுப்பணை கட்டவுள்ளது. இந்த தடுப்பணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும் . எனவே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டுமம் என்று மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கேரள அரசு, தமிழக அரசுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications