Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்படி இருக்கிறது கேரளா தேர்தல் களம்? ராகுல்காந்தி சந்திக்கும் சவால்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

கேரளா: வயநாடு தொகுதியில் 2வது முறையாக ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அவரது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

கேரளாவில் மக்களவைத் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 20 தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

TN Lok Sabha Election 2024 Will Rahul Gandhi win in Wayanad constituency

2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களை வென்றது. அதேபோல 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றியது.

2019இல் நடைபெற்ற தேர்தலில் கடந்த 2 முறை பெற்ற தொகுதிகளைக் காட்டிலும் 19 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எப்படிப் பார்த்தாலும் கேரள மக்களவை தேர்தலைப் பொறுத்தவரை கடந்த மூன்று தேர்தல்களாகவே காங்கிரஸ் கூட்டணிதான் ஏறுமுகத்தில் உள்ளது.

மாநிலக் கட்சிகளான இடதுசாரி கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்ததில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த 2024 தேர்தல் களத்தைப் பொறுத்தவரை மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் அணி தனியாகவும் பாஜக கூட்டணி தனியாகவும் போட்டியிடுகின்றன.

TN Lok Sabha Election 2024 Will Rahul Gandhi win in Wayanad constituency

இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஎம் கட்சி, கேரளாவுக்குள் தனது கூட்டணிக் கட்சியை எதிர்த்து களம் காண்கிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான விமர்சன யுத்தம் நடந்து வருகிறது.

ஒரே கூட்டணிக்குள் உள்ளவர்கள் இந்த மாநிலத்தில் எலியும் பூனையாக மாறி சண்டையிடுவதை பாஜகவினர் சுட்டிக்காட்டி வாக்குகளைத் திரட்டி வருகின்றனர்.

சிபிஎம் கட்சி மொத்தம் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிபிஐ கட்சி 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேரள காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.

ஆக மொத்தம் 20 தொகுதிகளில் இந்த இடதுசாரி கூட்டணியானது இடங்களைப் பகிர்ந்துகொண்டு தேர்தலைச் சந்திக்கிறது.

அடுத்ததாக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐயுஎம்எல் 2 தொகுதிகளிலும் ஆஎஸ்பி ஒரு தொகுதியிலும் கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிடிஜேஎஸ் கட்சி 4 தொகுதிகளில் போட்டிப்போடுகிறது. பாஜக மற்ற 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

TN Lok Sabha Election 2024 Will Rahul Gandhi win in Wayanad constituency

மாநிலத்தில் ஆளும் கட்சியாக இடதுசாரி கூட்டணி உள்ளது. ஆனாலும் இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு அதிக ஆதரவு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதி, நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்குக் காரணம், ராகுல்காந்தி மீண்டும் அதே தொகுதியில் 2வது முறையாகப் போட்டியிடுகிறார்.

பிரதமர் மோடி கூட எப்படி அவர் உபியிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ அதேபோல ராகுல் வயநாட்டிலிருந்தும் வெளியேற்றப்படுவார் என்று விமர்சனம் செய்து வருகிறார்.

கடந்த முறை நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை அவர் அதைவிட குறைவான வாக்குகளையே பெற முடியும் என்று களநிலவரம் சொல்கிறது.

இந்தத் தொகுதியில் 10% க்கும் மேலாக மலைவாழ் ஜாதியினரின் ஓட்டுகள் உள்ளன. அந்த ஓட்டுகள் ராகுல்காந்திக்கு எதிராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதே வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து சிபிஐ கட்சியை சேர்ந்த ஆனி ராஜா என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். பாஜகவை சேர்ந்த சுரேந்திரன் வயநாட்டில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் நட்சத்திர வேட்பாளர் என்று பார்த்தால் பாஜக சார்பாக நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

TN Lok Sabha Election 2024 Will Rahul Gandhi win in Wayanad constituency

அதே போல காங். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் களம் கண்டுள்ளார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் ராஜிவ் சந்திரசேகர் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பாஜக சார்பில் பத்தனம்திட்டா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இவரைக் கட்டாயம் தோற்கடிக்க வேண்டும் என்று அவரது தந்தையே அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+