முல்லைப் பெரியாறு அணையில் காவல்நிலையம்: கேரளாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு!
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரளா காவல்நிலையம் அமைத்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்கு மத்தியத் தொழில்படை பாதுகாப்புக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் 143 போலீசாருடன் புதிய காவல் நிலையத்தை கேரளா அமைத்துள்ளது.

கேரளாவின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் காவல்நிலையம் அமைத்த கேரள அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது, காவல்நிலையம் அமைத்த கேரள அரசின் முடிவு தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் முன்னிலையில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி இம்மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications