For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே.வங்கத்தில் மம்தாவுக்கு 29 தொகுதிகள், பிகாரில் பாஜக கூட்டணிக்கு 29: கருத்து கணிப்பு

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று சி.என்.என்.- ஐ.பி.என் மற்றும் தி வீக் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக சி.என்.என்.- ஐ.பி.என் மற்றும் தி வீக் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் பாஜகவும் ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளமும் அதிக இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் அமோகம்..

திரிணாமுல் அமோகம்..

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் 23 முதல் 29 தொகுதிகளைக் கைப்பற்றுமாம். இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் 7 முதல் 13 தொகுதிகள் கிடைக்கலாமாம்.

காங்கிரஸுக்கு 4

காங்கிரஸுக்கு 4

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 7 தொகுதிகள் கிடைக்குமாம். பாஜகவுக்கு இங்கு ஒரே ஒரு தொகுதிதான் கிடைக்கக் கூடுமாம்.

பீகாரில் பாஜகவுக்கு ஜெயம்

பீகாரில் பாஜகவுக்கு ஜெயம்

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா- லோக்ஜனசக்தி கூட்டணி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 21 முதல் 29 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது கருத்து கணிப்பு

காங்கிரஸ் கூட்டணி..

காங்கிரஸ் கூட்டணி..

பீகாரில் காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 7 முதல் 13 இடங்கள் கிடைக்குமாம்.

ஐக்கிய ஜனதா தளத்துக்கு பின்னடைவு

ஐக்கிய ஜனதா தளத்துக்கு பின்னடைவு

பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 முதல் 5 தொகுதிகள்தான் கிடைக்குமாம்.

ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளத்துக்கு 16

ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளத்துக்கு 16

ஒடிஷா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு 16 தொகுதிகள் கிடைக்குமாம். பாஜகவுக்கு 3 முதல் 7 தொகுதிகளும் காங்கிரஸுக்கு 4 இடங்கள் வரையும் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு.

English summary
The ruling Trinamool Congress in West Bengal could win up to 29 Lok Sabha seats in the state, while the BJP-led alliance would be ahead of its rivals in Bihar, an opinion poll said Monday. The CNN-IBN-The Week election tracker said Trinamool could win 23-29 of 42 seats in West Bengal, while the Biju Janata Dal (BJD) would lead the race in Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X