Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிபுராவில் ஆட்சி அமைக்கப்போவது யார்? தக்க வைக்குமா பாஜக.. மா. கம்யூனிஸ்ட் கட்சியுடன் கடும் போட்டி

திரிபுரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக 60 தொகுதிகளுக்கும் கடந்த 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

Subscribe to Oneindia Tamil

அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் ஒரே கட்டமாக 60 சட்ட சபை தொகுதிக்கு கடந்த 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 89.65 சதவீத ஓட்டுக்கள் பதிவான நிலையில் அங்கு பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 25 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்து முதல்வராக மாணிக் சாகா உள்ளார்.

ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதனால், தேர்தல் களம் அனல் பறக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

பாஜக 55 இடங்களில்

பாஜக 55 இடங்களில்

மொத்தம் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4.3 இடங்களில் போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.மீதம் உள்ள 4 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியில் போட்டியிடுகின்றன. மறுமுனையில் ஆளும் பாஜக கூட்டணியில் ஐபிஎப்டி கட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனைய 55 தொகுதிகளிலும் பாஜகவே களத்தில் உள்ளது.

28 லட்சம் வாக்காளர்கள்

28 லட்சம் வாக்காளர்கள்

மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் திரிபுராவில் 28 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. வேறு சில கட்சிகள் போட்டியில் இருந்தாலும் ஆளும் பாஜக எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. திரிபுரா முதல்வர் மாணிக் சாகா, பார்டோவாலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். திரிபுரா சட்டமன்ற களத்தில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 28 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

 3,337-வாக்குச்சாவடிகள்

3,337-வாக்குச்சாவடிகள்


மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்காக 3,337-வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 25 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

 வாக்குப்பதிவு தொடங்கியது

வாக்குப்பதிவு தொடங்கியது

தேர்தலை முன்னிட்டு வங்காள தேசத்துடனான சர்வதேச எல்லைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிற மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 4 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. விறு விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிபுராவில் 89.65 சதவீத வாக்குகள் பதிவானது.

மார்ச் 2ல் ஓட்டு எண்ணிக்கை

மார்ச் 2ல் ஓட்டு எண்ணிக்கை

இந்த தேர்தலில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் வரும் மார்ச் 2 ஆம் தேதிதான் எண்ணப்படுகின்றன. ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது அன்றைய தினம் தெரிந்து விடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+