டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது இன்று தெரிந்துவிடும்.

இரட்டை இலைச் சின்னத்தை பெற பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் டெல்லி போலீசாரால் டிடிவி தினகரன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்க டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

TTV Dinakaran filed a bail petition in the Delhi court, case comes today

இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிந்ததால் கடந்த 15ஆம் தேதி சிறையில் இருக்கும் தினகரன் காணொலிக் காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது காவலை வரும் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமீன் கோரி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran filed a bail petition in the Delhi court. TTV Dinakaran who was detained in Tihar jail, has filed a bail petition in the Delhi court. The petition will be heard today.
Please Wait while comments are loading...