திஹார் சிறையில் அடைக்கப்படுகிறாரா டிடிவி தினகரன்?
இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது.
கடந்த 17ஆம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தேகத்திற்கிடமாக தங்கியிருந்த சுகேஷ் சந்திர சேகரிடம் போலீசார் விசரணை நடத்தினர். அப்போது இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தர டிடிவி தினகரனிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் கடந்த சனிக்கிழமை முதல் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று 4வது நாளாக நடைபெற்ற விசாரணையின் போது சுகேஷ் சந்திரசேகரும் டிடிவி தினகரனும் ஒரே அறையில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இன்று டிடிவி தினகரன் டெல்லி நிதமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் டிடிவிதினகரனுக்கு அவ்வளவு எளிதாக ஜாமீன் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் திஹார் சிறையில் அடைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications