ஆர்கே நகர் வெற்றி பூரிப்போடு சிறையில் சித்தியுடன் தினகரன் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலா உறவுகளை விடாமல் விரட்டும் ஐடி துறை- வீடியோ

  பெங்களூரு: சென்னை ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நாளை டிடிவி. தினகரன் எம்எல்ஏவாக பொறுப்பேற்க உள்ள நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று தினகரன் சந்தித்தார்.

  ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக, திமுகவை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி. தினகரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றார். இந்த வெற்றியையடுத்து நாளை அவர் எம்எல்ஏவாக பொறுப்பேற்க உள்ளார்.

  TTV. Dinakaran met Sasikala in Bangalore Parapana Agrahara prison after his victory in RK Nagar elections

  இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி. தினகரன் இன்று சந்தித்தார். அவருடன் தினகரன் ஆதரவாளர்கள் பலரும் உற்சாகத்துடன் பரிசுப் பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.

  சசிகலாவை 15 நாட்களுக்கு ஒரு முறையே சந்திக்க முடியும் என்பதால் அவரை சந்திக்க தினகரன் கொடுத்த மனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில் மற்றொரு மனு தாக்கல் செய்து அதன் மீது அனுமதி பெற்று தினகரன் சசிகலா சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது அடுத்தகட்டமாக தான் எவ்வாறு செயல்படுவது, அதிமுகவை தங்கள் பக்கம் இழுக்க என்ன மாதிரியான அணுமுறையை கையாள்வது உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  TTV. Dinakaran met Sasikala in Bangalore Parapana Agrahara prison after his victory in RK Nagar elections, he is discussing with Sasikala about his future plans.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற