முதுகில் சுட்டு தப்பியோடிய தீவிரவாதி.. 2 போலீசார் வீர மரணம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர் மாவட்டத்தின் பகத்-பர்சுல்லா பகுதியில் இரண்டு போலீசார் ஒரு கடையில் நின்றுக் கொண்டிருந்த போது, அவர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் நிலைதடுமாறி விழுந்த இரண்டு காவலர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Two cops killed as terrorist opens fire in J-Ks Srinagar

ஆனால், அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இது தீவிரவாதிகள் நடத்திய மூன்றாவது தாக்குதலாகும்.

வீரமணம் அடைந்த போலீசாரின் பெயர்கள் முகமது யூசுப் மற்றும் சுஹைல் அகமது என்று தெரிய வந்துள்ளது. இந்த மோசமான நேரத்தில் வீர மரணம் அடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்போம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி இந்த தாக்குதலைக் கண்டித்து, வீரர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். "இந்த வன்முறையால் எதுவும் நிகழப் போவதில்லை. துயரத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+