ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! அதிகாலையிலேயே அதிரடி சம்பவம் செய்தது ராணுவம்!
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தின் குரேஸ் செக்டாரில் உள்ள நௌஷெரா நார்ட் பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 2 பேரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.
குரேஸ் செக்டாரில் இந்திய இராணுவம் மற்றும் ஜம்முகா ஷ்மீர் போலீஸ் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குரேஸ் செக்டாரில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறிந்து, எச்சரிக்கைப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதன் விளைவாக பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக, நமது ராணுவப் படையினர் திறம்பட துப்பாக்கிச் சூடு நடத்தி, இரண்டு பயங்கரவாதிகளை வீழ்த்தினர் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
குரேஸ் பகுதியில் ஊடுருவல் முயற்சி இருக்கலாம் என்று ஜம்மு- காஷ்மீர் காவல்துறையினரால் வழங்கப்பட்ட உளவுத்துறை தகவலை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ஆபரேஷன் அகல் என்ற தனி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் அந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டதீவிரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications