பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் சந்திப்பு- இருதரப்பு முக்கிய பேச்சுவார்த்தை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இருதரப்பு உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமெரிக்காவின் துணை அதிபரான ஜேடி வான்ஸ், இந்திய பெண்ணை மணந்துள்ளார். இதனால் இந்திய மருமகன் எனவும் அழைக்கப்படுகிறார். தற்போது 4 நாட்கள் பயணமாக ஜேடி வான்ஸ் தமது குடும்பத்தினருடன் இந்தியா வருகை தந்துள்ளார்.

Modivance

டெல்லியில் சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவிலில் ஜேடி வான்ஸ் வழிபாடு நடத்தினார். மேலும் டெல்லியில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களையும் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் ஜேடி வான்ஸ், குடும்பத்தினருடன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும், இருதரப்பு உறவு குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், வான்ஸ் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.

அமெரிக்காவும் இந்தியாவும் நட்பு நாடுகளாக வர்த்தக உறவை மேம்படுத்தி வருகின்றன. இருநாடுகளிடையே கடந்த ஆண்டு 129.2 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றது. இந்தியாவிடம் இருந்து 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்தது. இது முந்தைய ஆண்டுகளைவிட அதிகம்.

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்ற நிலையில் பல்வேறு அதிரடிகளைக் காட்டி வருகிறார். பிற நாடுகள் மீதான வரிவிதிப்பை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து வருகிறார் டிரம்ப். இது உள்நாட்டில் டிரம்ப்புக்கு பெரும் சிக்கலையும் கொடுத்துள்ளது.

இந்திய பொருட்களுக்கு 26% வரி தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க துணை அதிபர் ஜோடி வான்ஸின் இந்திய பயணத்தின் போதும் இது தொடர்பாக பேச்சுகள் மிக முக்கிய இடம் பெறுகின்றன. அமெரிக்காவுடன் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைசார்ந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

ஜேடி வான்ஸ் வருகைக்கு எதிர்ப்பு

அமெரிக்கா துணை அதிபர் ஜேடி வான்ஸின் இந்திய வருகைக்கு எதிராக நாட்டின் பல மாநிலங்களில் விவசாய சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மூலம் இந்திய விவசாயத்தை அமெரிக்கா சிதைக்கிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+