பெண் பயணியை முத்தமிட பாய்ந்த உபேர் டாக்சி டிரைவர்: டெல்லியில் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் உபேர் டாக்சி டிரைவர் பெண் பயணியை முத்தமிட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் 25 வயது பெண்ணை உபேர் டாக்சி டிரைவர் சிவ் குமார் யாதவ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து டெல்லியில் உபேர் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அப்படி இருந்தும் டெல்லியில் உபேர் டாக்சிகள் ஓடத் தான் செய்கின்றன.
இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரை உபேர் டாக்சி டிரைவர் முத்தமிட முயன்றது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் சகோதரர் ஃபேஸ்புக்கில் கடந்த 30ம் தேதி தெரிவித்துள்ளார். அந்த பெண் டெல்லியில் இருந்து குர்காவ்ன் சென்றுள்ளார்.
அந்த பெண்ணின் சகோதரர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உபேர் நிறுவனத்திடம் கூறியிருப்பதாவது,
என் சகோதரி கடந்த மாதம் உங்கள் நிறுவன டாக்சியை எடுத்துள்ளார். டிரைவர் வினோத் என் சகோதரியை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றுள்ளார். இது குறித்து உபேர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் பயனில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு உபேர் நிறுவனம் பதில் அளித்திருப்பதாவது, அந்த டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகறோம். இது போன்ற குற்றங்களை எங்கள் நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் டிரைவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications