For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தரூருக்கும் எனக்கும் தொடர்பா, நான் ஐஎஸ்ஐ ஏஜென்டா?: குமுறும் பாக். பத்திரிக்கையாளர்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: தன்னை ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட் என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா மீது வழக்கு தொடரப் போவதாக பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தரார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பத்திரிக்கையாளரான மெஹர் தராருக்கும், தனது கணவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கார் குற்றம்சாட்டியுள்ளார். மெஹரை ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட் என்று கூறியுள்ள அவர் இது குறித்து அவர் ட்விட்டரில் பல தகவல்களை போஸ்ட் செய்துள்ளார்.

இந்நிலையில் மெஹர் பதிலுக்கு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கட்டுப்பாட்டில் இல்லா சுனந்தா

கட்டுப்பாட்டில் இல்லா சுனந்தா

தனது கட்டுப்பாட்டிலேயே இல்லாத பெண் கூறுவது பற்றி எல்லாம் என்னால் எதுவும் பதில் சொல்ல முடியாது. ஐஎஸ்ஐ ஏஜென்ட், தரூரை பின் தொடர்பவர்...அந்த பெண் யார் என்பதை காட்டுகிறது என்று மெஹர் தெரிவித்துள்ளார்.

கீழ்த்தரமானது

கீழ்த்தரமானது

ஒரு பெண் மற்றொரு பெண்ணை தனது கணவருடன் சேர்த்து பேசுவது இருப்பதிலேயே கீழ்த்தரமானது. திருமணத்திற்கு மரியாதையே இல்லை என்று மெஹர் ட்வீட் செய்துள்ளார்.

பதில்

பதில்

இந்திய தொலைக்காட்சி சேனல் ஒன்று தரூர் விவகாரம் குறித்து என்னிடம் கேட்டது. அவர்களுக்கு நான் கேமரா முன்பு பேட்டி அளிக்க வேண்டுமாம். நான் தர மாட்டேன். அழுக்கு குறித்து பதில் சொல்லத் தேவையில்லை என்று மெஹர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வழக்கு

வழக்கு

சசி தரூருக்கும் எனக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. என்னை ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட் என்று கூறியுள்ள சுனந்தா மீது வழக்கு தொடர்வேன் என்று மெஹர் முன்னணி இந்திய செய்தி சேனல் ஒன்றுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.

English summary
Pakistan journalist Mehr Tarar told that she is going to sue Union minister Shashi Tharoor's wife Sunanda for calling her an ISI agent. Tarar rubbished Sunanda's accusation that she is having an affair with Tharoor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X