அஸ்ஸாமில் 6 ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திய உல்பா தீவிரவாதிகள்
குவஹாத்தி: அஸ்ஸாமில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர்கள் 6 பேரை துப்பாக்கி முனையில் உல்பா தீவிரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது உல்பா (ஐ) இயக்கம். சீனாவின் ஆதரவுடன் செயல்படுகிற தீவிரவாத இயக்கங்களில் உல்பாவும் ஒன்று.

அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவன பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களை கடத்தி பணம் பேரம் பேசுவதையும் உல்பா தீவிரவாதிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ஸாமில் ரூ1 கோடி கேட்டு பாஜக பிரமுகர் மகனை கடத்தி சென்றனர் இந்த தீவிரவாதிகள்.
கடந்த டிசம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தின் சங்லாங் மாவட்டத்தில் தனியார் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரை உல்பா தீவிரவாத கும்பல் கடத்திச் சென்றது. பல மாதங்கள் பிணைக் கைதிகளாக வைத்திருந்த நிலையில் கடந்த 3-ந் தேதிதான் இருவரையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் அஸ்ஸாமின் சாராய்டியோ மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவன ஊழியர்கள் 6 பேரை அதிகாலை 1.30 மணிக்கு துப்பாக்கி முனையில் உல்பா தீவிரவாத கும்பல் கடத்திச் சென்றுள்ளது. ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 6 பேரை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் இதுவரை எந்த நிபந்தனையையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே 6 ஊழியர்கள் எங்கே பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிவதில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications