உ.பி.யில் மெட்ரோ பணியின் போது விபரீதம்... தூண்கள் சரிந்து ஒருவர் பலி, 3 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மெட்ரோ பணியின் போது தூண்கள் சரிந்து விழுந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள ஆலம்பாக் பகுதியில் மெட்ரோ பணி நடந்து வருகிறது. வழக்கம்போல், இன்றும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இரண்டு தூண்கள் எதிர்பாராத விதமாக சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தன.

இதில், பணியில் இருந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 8 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.












Click it and Unblock the Notifications