பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும்: யுனிசெப்
லக்னௌ: பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுப்படும் குற்றவாளிகளை எந்த விதமான பாரபட்சமும் இன்றி தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவேண்டும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (யுனிசெப் ), கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளது.
"பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலாத்காரம் செய்யும் கொடூர சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவை வார்த்தையால் வர்ணிக்க முடியாத குற்றங்களாக இருக்கின்றன. பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் வெளிவருவதே இல்லை.
உத்தரப் பிரதேசத்தில் சிறுமிகள் இருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அவர்களை உயிருடன் மரத்தில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பவம், மிகவும் மோசமான போக்கினை காண்பிக்கின்றது. இது போன்ற மிருகத்தனமான பாலியல் வன்முறைகள் கண்டிக்கத்தக்கது.
இந்த வேலைகளில் ஈடுப்படும் குற்றவாளிகளை எந்த விதமான பாரபட்சமும் இன்றி தண்டிக்க வேண்டும்.
இது போன்ற வழக்குகளில், நியாயப்படுத்துவது, குற்றங்களுக்கு காரணம் கூறுவது என எல்லா விதமான கூற்றுகளையும் நியாயப்படுத்துவதை சட்டம் அனுமதிக்க கூடாது. இது போன்ற சம்பவங்கள் சிறுமிகள், இளம் பெண்கள், சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் என அனைவரையும் பாதிக்கின்றது.
இவை அனைத்தும் மனித இனத்திற்கு எதிரான கொடூரங்களாக பார்க்கப்படுகின்றன. இவை முற்றிலும் மனித உரிமை மீறல்கள்.
உலகில் உள்ள அனைத்து குழந்தைகளையும் நாம் காக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். சிறுவர்களை நாம் பாதுகாப்பும் கண்ணியமிக்கவர்களாக வளர்க்க வேண்டும்" என யுனிசெப் தெரிவித்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications