மத்திய பட்ஜெட் தாக்கல் முடிந்தது.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
Recommended Video

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் முடிவடைந்து இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
வழக்கமாக பிப்ரவரி இறுதியில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் கடந்த வருடத்தில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். இதற்கு பின் அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
அதேபோல் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இதுதான். மேலும் இதனுடன் ரெயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த வருடம் நிறைய மாநிலங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் அதை மையமாக வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் தற்போது பட்ஜெட் தாக்கல் நடந்து முடிந்து இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications