Budget 2019 Live: உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை.. கூடுதல் செஸ் வரி விதித்து பட்ஜெட்டில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Budget 2019 :பெட்ரோல், டீசல் மீது கூடுதல் செஸ் வரி விதிப்பு..விலை உயரும் அபாயம்- வீடியோ

    டெல்லி:பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே, மோடி அரசின், 2வது ஆட்சி காலத்து முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    பாஜக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது உரையை அவர் ஆரம்பித்தார்.

    நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை, உடனுக்குடன் அறிய இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

    Jul 05, 2019, 1:12 pm IST

    பட்ஜெட் உரையை நிறைவு செய்தார், நிர்மலா சீதாராமன், சுமார் 2 மணி நேரம் 5 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசித்தார்
    Jul 05, 2019, 1:10 pm IST

    தங்கம் விலை உயரும் வகையில், பட்ஜெட்டில் வெளியானது அறிவிப்பு. இதுவரை 10 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான சுங்க வரி, இனி 12.5 சதவீதமாக அதிகரிப்பு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
    Jul 05, 2019, 1:08 pm IST

    பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி அதிகரிப்பு. ரோடு, கட்டமைப்பு செஸ் என்ற பெயரில் 1 லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு தலா 1 ரூபாய் அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி கோஷம்
    Jul 05, 2019, 1:07 pm IST

    இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீதம் கலால் வரி அதிகரிக்கப்படும். ராணுவ தளவாட பொருட்களுக்கு கலால் வரி கிடையாது- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
    Jul 05, 2019, 1:00 pm IST

    டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் கட்டணம் கிடையாது- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
    Jul 05, 2019, 12:57 pm IST

    டிஜிட்டல் பணப் புழக்கம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. ரொக்கப் பணத்தின் மூலம் வணிகம் மேற்கொள்வதை குறைப்பதற்காக, ஆண்டுக்கு 1 கோடிக்கும் மேலாக ஒரு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்தால், TDS வரி 2 சதவீதம் விதிக்கப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
    Jul 05, 2019, 12:54 pm IST

    வருமான வரி தாக்கல் செய்யும்போது பான் கார்டு இனி தேவையில்லை, ஆதார் எண்ணை வைத்தே வரி தாக்கல் செய்ய முடியும். வரி செலுத்துவதை எளிமையாக்க இந்த நடைமுறை கொண்டு வருகிறோம்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
    Jul 05, 2019, 12:46 pm IST

    எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க திட்டம். எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்காக வாங்கிய கடன் மீதான வட்டியில், 1.5 லட்சம் வரை வருமான வரியில் தள்ளுபடி பெறலாம்- நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
    Jul 05, 2019, 12:44 pm IST

    400 கோடி வரை ஆண்டு வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, 99.3% நிறுவனங்கள் இந்த திட்டம் வரையறைக்குள் கொண்டு வந்துவிடும் - நிர்மலா சீதாராமன் முன்பு, 250 கோடி வரையிலான வர்த்தகம் இருந்தாலே 25 சதவீத வரி விதிக்கப்பட்டது
    Jul 05, 2019, 12:42 pm IST

    நேரடி வரி விதிப்பு 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 5 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 5 லட்சத்திற்கு கீழே வருவாய் கொண்டவர்களுக்கு வரி இல்லை- நிர்மலா சீதாராமன் பேச்சு
    Jul 05, 2019, 12:38 pm IST

    பிசிராந்தையாரை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேச்சு. யானை புகுந்த நிலம் என்ற அறிவுரையை பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வழங்கினார் பிசிராந்தையார். தவறான உச்சரிப்புடன் நிர்மலா சீதாராமன் செய்யுளை வாசித்ததால் சலசலப்பு
    Jul 05, 2019, 12:34 pm IST

    பார்வையற்றவர்களும் அடையாளம் காணும் வகையில் 1, 2, 5, 10, 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில், பொது பயன்பாட்டுக்கு இவை கொண்டுவரப்படும்- நிர்மலா சீதாராமன்
    Jul 05, 2019, 12:32 pm IST

    அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக 100 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளோம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
    Jul 05, 2019, 12:32 pm IST

    அரசு துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ.70,000 கோடி வழங்கப்படும். வராக்கடன் குறைந்துள்ள நிலையில், வங்கிகளுக்கு ஊக்கம் அளிக்க நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
    Jul 05, 2019, 12:22 pm IST

    17 சுற்றுலா தலங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். நமது பழங்குடியினர் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் இவை அமையும்- நிர்மலா சீதாராமன்
    Jul 05, 2019, 12:17 pm IST

    வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார்

    வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார்
    வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் இந்தியா வரும்போது, 180 நாட்கள் காத்திருப்பு தினத்திற்கு முன்பாகவே இது வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன்
    Jul 05, 2019, 12:17 pm IST

    பெண்கள் மேம்பாடு

    பெண்கள் மேம்பாடு
    பெண்கள் சுய உதவிக்குழுவிற்கு முக்கியத்துவம் தரப்படும். அதிகபட்சமாக இந்த குழுக்கள் வாயிலாக தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். ஜன்தன் வங்கி கணக்கு மூலமாக இதைப் பெறலாம்- நிர்மலா சீதாராமன்
    Jul 05, 2019, 12:12 pm IST

    பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான் திட்டத்தின்கீழ், 'பாரத் நெட்' என்ற பெயரில், நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும், இன்டெர்நெட் இணைப்பை இலக்காகக் கொண்டுள்ளோம்- நிர்மலா சீதாராமன்
    Jul 05, 2019, 12:05 pm IST

    புதிய தொழில்கள் துவங்குவோருக்காகவே தனி சாட்டிலைட் டிவி சேனல் துவங்கப்படும். இதில் தொழில் துவங்குவது, வரி உள்ளிட்ட பல விஷயங்கள் காண்பிக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலமாகவே இந்த சேனல் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
    Jul 05, 2019, 12:01 pm IST

    புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி முறையாக மாற்ற இந்த திட்டம். பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன் மூலமாக, ஆய்வு கல்வி அதிகரிக்கப்படும். அனைத்து துறைகளிலும் உள்ள நிதி, இதற்கு பயன்படுத்தப்படும். உயர் கல்வி நிலையங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் தாய் வீடாக மாற்றப்படும். 400 கோடி ரூபாய், இதற்காக ஒதுக்கீடு. ஸ்டடி இன் இந்தியா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு வெளிநாட்டு மாணவர்களை நமது கல்வி முறையை கற்றுத்தர ஊக்கப்படுத்துவோம்- நிர்மலா சீதாராமன்
    Jul 05, 2019, 11:55 am IST

    2024 ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு, இதற்காக, ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன் தகவல்
    Jul 05, 2019, 11:47 am IST

    பாரம்பரிய தொழில்களை அதிக கிராம மக்கள் மேற்கொண்டு வருவதால், அதை மேம்படுத்த, நாடு முழுக்க, காதி, தேன், மூங்கில் கிளஸ்டர்கள் அமைக்கப்படும். 2019-20ம் ஆண்டில், 100 கிளஸ்டர்கள் நாடு முழுக்க அமைக்கப்படும். 1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
    Jul 05, 2019, 11:41 am IST

    1.95 கோடி வீடுகள் 2022ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம், வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்
    Jul 05, 2019, 11:34 am IST

    3 கோடி சில்லரை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு போதுமானது. இந்த திட்டத்திற்கு பிரதான் மந்த்ரி கரம் யோகி மான் தன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ளது.
    Jul 05, 2019, 11:18 am IST

    பரத்மாலா திட்டம், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை உருவாக்க உதவும், சாகர்மாலா துறைமுக இணைப்பை மேம்படுத்தும்- நிர்மலா சீதாராமன்
    Jul 05, 2019, 11:15 am IST

    இந்தியா இப்போது 6வது பெரிய பொருளாதார நாடு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 11ஆவது இடத்தில் இருந்தது: நிர்மலா சீதாராமன் உரை
    Jul 05, 2019, 11:09 am IST

    "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்": நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
    Jul 05, 2019, 11:08 am IST

    நாங்கள் முதலில் பதவியேற்றபோது, இந்தியா, 1.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. சில வருடங்களில் அதை 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றினோம். இன்னும் சில வருடங்களில் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிர்மலா சீதாராமன் பேசினார்
    Jul 05, 2019, 11:03 am IST

    பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மீண்டும் ஒருமுறை பாஜக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பிட்டு உரையை ஆரம்பித்தார்
    Jul 05, 2019, 11:02 am IST

    பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் கூடியது. சில வினாடிகளில் பட்ஜெட் தாக்கல் உரையை துவங்குகிறார் நிர்மலா சீதாராமன்
    READ MORE

    Union Budget 2019 -20: Live updates of budget announcement
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+