மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 1% உயர்வு.. அமைச்சரவை ஒப்புதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதே போன்று அகவிலை நிவாரணம் 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Union cabinet approves 1% DA hike to central government employees and pensioners

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அகவிலை நிவாரணமும் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலை உயர்வு மூலம் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

ஜூலை, 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது. தனியார் நிறுவன ஊழியர்களின் பணிக்கொடை திருத்த மசோதாவிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Union Cabinet on Tuesday approved a 1% hike in dearness allowance (DA) and dearness relief to 5%, benefiting 48.85 central government employees and 55.51 lakh pensioners.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற