இந்தியா பதிலடி தருகிறது? ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானுடனான எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் கட்டுப்பாட்டுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலை தாக்குதலுக்கு நமது ராணுவம் பதிலடி நடவடிக்கைகளை தொடங்க இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல் மற்றும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டனவா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Army

பஹல்காம் படுகொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என மத்திய அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலைக்கு காரணமான பயங்கரவாதிகள், கற்பனையிலும் நினைக்க முடியாத பாடத்தை இந்தியா தரும் என பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரித்திருந்தார். இதனால் இந்திய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என தொடைநடுங்க்லும் பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 2 நாட்களாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு நமது ராணுவத்தினரும் பதிலடி தந்து வருகின்றனர்.

மேலும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதலை ராணுவம் எந்த நேரத்திலும் நடத்தலாம் என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு இன்று திடீரென ஊடகங்களுக்கு, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்களை விடுத்திருக்கிறது.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தேசிய பாதுகாப்பு நலன் கருதி அனைத்து வகை ஊடகங்களும் மிகுந்த பொறுப்புடனும், சட்டங்களுக்கு உட்பட்டும் பாதுகாப்பு தரப்பு சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டும்; குறிப்பாக, பாதுகாப்பு படையின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளில் "நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன" என்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் கார்கில் யுத்தம், மும்பை தாக்குதல், கந்தஹார் விமானக் கடத்தல் சம்பவங்களின் போது ஊடகங்கள் தங்கு தடையின்றி செய்திகளை ஒளிபரப்பியதால் ஏற்பட்ட எதிர்விளைவுகளை புரிந்து கொள்ள வேண்டும்.. தேசிய பாதுகாப்பில் அனைத்து வ ஊடகங்கள், சமூக வலைதளம் மற்றும் தனிநபர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை டிவி சேனல்கள் நேரடியாக- லைவ் ஒளிபரப்பு செய்யவும் கூடாது; அரசால் நியமிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கும் வரை இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிடவும் கூடாது எனவும் மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்து:ள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+