பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டே தீருவோம்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி பிரகடனம்!
கொல்கத்தா: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை இந்தியா மீட்டே தீரும் என்று மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார்.
நாடு விடுதலை அடைந்த போது காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சித்தது. அப்போது காஷ்மீர் தனி சமஸ்தானமாக இருந்ததால் அதன் பல பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றியது. பின்னர்தான் இந்திய ராணுவம் களமிறங்கி பாகிஸ்தானை விரட்டியடித்தது. ஆனாலும் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதிகள் இன்னமும் அந்நாட்டிடமே இருக்கிறது. அப்பகுதிகள்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என 75 ஆண்டுகளாக அழைத்து வருகிறோம்.

மத்தியில் பாஜக ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகள் இந்தியாவின் ஒரு பகுதி என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு வெளியிட்ட வரைபடத்திலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு குறித்து தொடர்ந்து பிரதமர் மோடி முதல் அனைத்து பாஜக தலைவர்களும் பேசி வருகின்றனர். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, 400 சீட்டுகளுக்கு மேல் பாஜக வென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்போம் என பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசியிருக்கிறார். மேற்கு வங்க பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: 370-வது ரத்துக்குப் பின்னர்தான் ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்லனர். ஆஸாதி- சுதந்திரம் வேண்டும் என காஷ்மீரில் கேட்ட முழக்கம் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறது. ஜம்மு காஷ்மீரில் நடந்த கல்வீச்சு சம்பவங்கள் இப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் நடக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியா மீட்டே தீரும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications