ராஜ்யசபாவில் வக்பு வாரிய மசோதா தாக்கல்- கறுப்பு உடை அணிந்து திமுக எம்பிக்கள் போராட்டம்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று அதிகாலை வக்பு வாரிய மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ராஜ்யசபாவிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.

நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது சுமார் 12 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. மொத்தம் 60 எம்பிக்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு லோக்சபாவில், வக்பு சட்ட திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்பிக்கள்; எதிர்ப்பாக 232 எம்பிக்கள் வாக்களித்தனர். இதனையடுத்து லோக்சபாவில் சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
இந்த நிலையில் ராஜ்யசபாவிலும் சர்ச்சைக்குரிய வக்பு வாரிய மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். தற்போது ராஜ்யசபாவில் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
திமுக எம்பிக்களின் எதிர்ப்பு
லோக்சபாவில் சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் கறுப்பு உடை அணிந்து வந்தனர்.












Click it and Unblock the Notifications