மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் கடிதம்
டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானாவாஸ் ஹூசேன் கடந்த வாரம் இதே போன்ற கடிதம் ஒன்றினை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து பெற்றுள்ள நிலையில் அந்த வரிசையில் முக்தாரும் இணைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் இந்த விவகாரமான கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. நக்வியின் டெல்லி முகவரியான பாந்த்ரா பார்க் இல்லத்திற்கு ஜனவரி 25 ஆம் தேதியன்று இந்த கடிதம் வந்தடைந்துள்ளது. தபாலில் வந்துள்ள இக்கடிதத்தில் முழுக்க, முழுக்க மோசமான வார்த்தைகள் நிறைந்துள்ளதாகவும், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் நக்வியையும், பாஜகவையும் கேவலமாக வசைபாடியும் எழுதியுள்ளதாக அரசுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், "இதுபோன்ற வசைகளை நான் ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாகவே கண்டுள்ளேன். இது பெரிய விஷயமல்ல" என்று ஷானாவாஸ் ஹூசேன் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications