பிரகாஷ்ராஜ் அவார்டே வாங்கி இருக்கக் கூடாது... கொதிக்கும் மத்திய அமைச்சர் சதானந்த கெளடா!
கவுரி லங்கேஷ் படுகொலையில் அமைதியாக இருந்த மோடியை சிறந்த நடிகர் என்று கூறி, அனைத்து விருதுகளையும் அவருக்கே வழங்கப் போவதாக அறிவித்த பிரகாஷ்ராஜுக்கு மத்திய அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தார்.
டெல்லி: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணம் குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வந்தார் பிரதமர் மோடி.
இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் , பிரதமர் மோடியை சிறந்த நடிகர் என்று கூறி அதற்கான விருதுகளையும் அவருக்கே கொடுத்துவிடலாம் என்று பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் கெளடா " ரகாஷ் ராஷ் எந்த விருதுமே வாங்கி இருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
சதானந்த கெளடா கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி குறித்து எழுதிய கவுரி
கர்நாடகாவில் ''லங்கேஷ் பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி விமர்சன கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் மோடி பற்றி எழுதி வந்த கட்டுரைகள் அனைத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கவுரி சுட்டுக் கொலை
இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் நாடு சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரைக் கொன்றவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் இன்னும் திணறி வருகின்றனர். இவரைக் கொன்றவர்களை கண்டுபிடிக்க கூறி பல அமைப்புகளும், எதிர்க்கட்ச்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

மோடி நல்ல நடிகர்
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் சில வாரங்களுக்கு முன்பு இந்த விசயம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் " கவுரி லங்கேஷின் கொலையில் எல்லோரும் கருத்து தெரிவித்திருந்தனர் ஆனால் பிரதமர் மோடி மட்டும் இது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் வேண்டும் என்றே மவுனமாக இருக்கிறார். பிரதமருக்கு மிகவும் நன்றாக நடிக்கத் தெரிந்திருக்கிறது. அவர் என்னைவிடவும் நல்ல நடிகர். அவருக்கு சிறந்த நடிருக்கான விருதுகளை கொடுத்து விடலாம் " என்று கூறியிருந்தார்.

விருதே வாங்கி இருக்க கூடாது
பிரகாஷ் ராஜின் இந்தக் கருத்து மிகவும் பேசப்பட்ட நிலையில் , மத்திய அமைச்சர் கெளடா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் " பிரகாஷ் நல்ல நடிகர் . அவர் இப்போது திடீர் என்று இடது சாரிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இது மக்களுக்குப் பிடிக்காது. விருது அவசியம் இல்லை என்று நினைக்கும் நபர், விருது கொடுக்கும் போதே அதை வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும். இப்போது பிரதமருக்கு கொடுப்பேன் என்று கூறுவது அநாகரிகம்" என்று கூறினார்.
கொல்லப்பட்ட காவிரி லங்கேஷுக்கு , நடிகர் பிரகாஷ் ராஜ் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரகாஷ் ராஜ்
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications