இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா...??!
Recommended Video

டெல்லி: நான் மத்திய அமைச்சர். எனக்கு ப்ரீயாக கிடைத்து விடுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை என்று பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சரான ராமதாஸ் அத்வாலே கூறியுள்ளார். நாட்டு மக்களிடையே இது பெரும் கோபத்தை கிளப்பி விட்டுள்ளது.
இவருக்கு கிடைக்கும் அத்தனை ஓசி சமாச்சாரமும் மக்களின் வரிப்பணத்திலிருந்து அள்ளி கொடுக்கப்படுகிறது என்பதை இந்த மாண்புமிகு அமைச்சர் வசதியாக மறந்து விட்டுப் பேசுகிறாரே என்று சமூக வலைதளங்களில் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

மோடி அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கிறார் ராமதாஸ் அத்வாலே. ஜெய்ப்பூருக்கு வந்த இவரிடம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேட்டபோதுதான் மேலே சொன்ன கருத்தை உதிர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மத்திய அமைச்சர், எனக்கு ப்ரீயாக வந்து விடுகிறது. எனவே எனக்கு கவலை இல்லை. அமைச்சராக இல்லாமல் போயிருந்தால், நானும் பாதிக்கப்பட்டிருப்பேன் என்று கூறினார் ராமதாஸ்.
மேலும் அவர் கூறுகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதை அரசுதான் குறைக்க வேண்டும் என்றார்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான இந்திய குடியரசுக் கட்சியின் சார்பில் ராஜ்யசபா மூலம் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராமதாஸ். மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலித் தலைவர்.
நாடே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பெரும் கொந்தளிப்பில் உள்ளது. ஆனால் மக்களை கேலி செய்யும் வகையில், மக்களின் துன்பத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத வகையில் எனக்கு ஓசியாக வருகிறது என்று ராமதாஸ் அத்வாலே அலட்சியமாக பேசியிருப்பது மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications