உ.பி. மற்றொரு கோயிலில் 2,500 டன் தங்கம் இருக்கிறதாம்.. 'கனவு' சாது மீண்டும் அதிரடி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிதிலமடைந்த கோட்டையில் 1,000 டன் தங்கம் இருப்பதாக கிளம்பிய அதிரடி ஓயவில்லை. இப்போது மற்றொரு கோயிலில் 2,500 டன் தங்க புதையல் இருக்கிறது என்று கனவு சாது சோபன் சர்கார் புதிய அதிரடியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே மன்னர் ராவ் ராம் பாக்சிங்கின் கோட்டை உள்ளது. 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதால் மன்னர் தூக்கிலிடப்பட்டார். இதைத் தொடர்ந்து கோட்டை கைவிடப்பட்டது. தற்போது சிதிலமடைந்துள்ளது.

இந்நிலையில் உள்ளூர் சாதுவான சோபன் சர்கார் என்பவர், தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் டன் தங்கம் இருக்கிறது என்றும் அதை தோண்டி எடுத்து நாட்டின் பொருளாதார நிலைமையை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். முதலில் இதை யாரும் நம்பவில்லை.
ஆனால் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மகந்தை சந்தித்த சாது எப்படியோ நம்ப வைத்துவிட்டார். இதனால் நாளை மறுநாள் கோட்டையில் புதையலைத் தோண்டும் பணி நடைபெற இருக்கிறது. இதற்காக தொல்லியல்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே தோண்டும் புதையல் தங்களுக்கே சொந்தமானது என்று மன்னர் வாரிசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் புதையலைத் தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க.. தெற்கு கான்பூரில் ஃபதேபூர் அருகே உள்ள கோயில்களில் 2,500 டன் தங்கப் புதையல் இருப்பதாக தாம் இன்னொரு கனவு கண்டதாக சொல்லி புதிய பரபரப்புக்கு அடித்தளம் போட்டு வைத்திருக்கிறார் கனவு சாது சோபன் சர்கார்.
-
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications