காதலியுடன் ஓடிப் போனவரை பிடித்து வந்து.. கட்டி வைத்து பெல்ட் அடி.. வைரலாகும் வீடியோ
கான்பூர் : உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபரை அந்த ஸ்டேஷனின் காவலர்கள் பெல்ட்டால் அடித்து துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபரை அடித்தபோது, வலிதாங்காமல் அவர் அலறியதை சக காவலர்கள் ரசித்து அதை வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வெளியாகி கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கான்பூரின் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

காவல்நிலையத்தின் உள்ளே தாக்குதல்
வடமாநிலங்களின் பல பகுதிகளில் காரணமே இன்றி அப்பாவி மக்கள் மீது போலீசார் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அடிக்கடி வீடியோ பதிவுகளாக வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கான்பூரின் காவல்நிலையம் ஒன்றில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபரை காவலர்கள் பெல்ட்டால் அடித்து துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்நிலையத்தில் நையப்புடைப்பு
தான் காதலித்த பெண்ணிற்கு உதவி செய்த காரணத்தால் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அந்த நபர், அங்கு தூணில் வைத்து லத்தி மற்றும் பெல்ட்டால் அடித்து உதைக்கப்பட்டார்.

ரசித்து சிரித்த காவலர்கள்
அந்த நபரை காவலர்கள் மாற்றி மாற்றி அடித்தபோது, அங்கிருந்த சக காவலர்கள், அவர் அலறித்துடித்த அந்த காட்சியை ரசித்து சிரித்தனர். மேலும் சம்பவத்தை வீடியோ பதிவும் செய்தனர்.

காவல்துறை உயரதிகாரி உறுதி
காவலர்களின் இந்த அராஜகம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த கான்பூரின் மூத்த காவல்துறை உயரதிகாரி, பிரதுமான் சிங், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications