யாருக்கும் படிப்பு, வேலை இல்லை.. வீட்டிற்கு ஒரு துப்பாக்கி.. அதிர வைக்கும் உ.பி பசுக்காவலர்கள்!
உத்தர பிரதேசத்தில் போலீஸ் அதிகாரியை கொன்றதாக 8 இந்துத்துவா அமைப்பை சேர்ந்த பசுக்காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் அதிகாரியை கொன்றதாக 8 இந்துத்துவா அமைப்பை சேர்ந்த பசுக்காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
நேற்று முதல்நாள் உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில் பசுக்களை கொன்றுவிட்டதாக பசுக்காவலர்கள் பெரிய கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் பசுக்காவலர்களால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்தும், பசுக்காவலர்கள் எப்படி தீவிரவாதிகள் போல திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்றும் நிறைய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கைது செய்யப்பட்டான்
இந்த கொலையில் முதல் குற்றவாளி யோகேஷ் ராஜ் என்ற பசுக்காவல் படையை சேர்ந்த இளைஞன்தான். இவன் இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவன். இவனை இன்னும் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யவில்லை. இவன்தான் கொலை மற்றும் கலவரத்தை தூண்டியது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தை சேர்ந்தவர்கள்
இவனுடன் சேர்த்து மொத்தம் 28 பேர் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்கள். இதில் 8 பேர் இந்து வாஹினி, சிவசேனா, பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ், பாஜகவை சேர்த்தவர்கள். இவர்கள்தான் கலவரத்தை முன்னின்று நடத்தியது. மீதமுள்ளவர்கள் எதோ ஒரு வகையில் இந்துத்துவா அமைப்புகள் நடத்தும் எல்லா கலவரத்தில் கலந்து கொண்டு கலவரம் செய்யும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிப்பும் வேலையும் இல்லை
இதில் இருக்கும் 90 சதவிகிதம் பேர் படிக்காதவர்கள். மேலும் கல்லூரி செல்லும் சிலரை தவிர்த்து மீதமுள்ள யாரும் வேலைக்கு செல்லவில்லை. அங்கு நடக்கும் இந்து பண்டிகைகள் மூலம் வசூல் ஆகும் பணத்தை வைத்துதான் இவர்கள் காலத்தை தள்ளி வருகிறார்கள். எல்லோரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலையைவிட்டுவிட்டு சேர்ந்தனர்
இதில் சிலர் தாங்கள் பார்த்த வேலையைவிட்டுவிட்டு வந்த இப்படி போராட்டம் கலவரம் என்று குதித்து இருக்கிறார்கள். இதில் முதல் குற்றவாளி யோகேஷ் ராஜ் கூட வேலையை விட்டுவிட்டுதான் பஜ்ரங் தள் அமைப்பில் சமூக சேவை செய்பவனாக 4 வருடம் முன் சேர்ந்து இருக்கிறான். இவனை பார்த்து பலர் அந்த அமைப்பில் சேர்ந்துள்ளனர்.

இப்படித்தான்
இவனின் சின்ன, சரியாக சிமெண்ட் கூட பூசாத வீட்டில் இந்தியாவின் வரைபடம் பூடான், சீனா, பாகிஸ்தான் எல்லாம் சேர்த்து ஒரே படமாக பாரத மாதாவுடன் வரையப்பட்டு இருக்கிறது. பிரிக்கப்படாத இந்தியா என்றும் அதில் எழுதி இருக்கிறது. அங்கு இருக்கும் பலரது வீடுகள் இப்படித்தான் உள்ளது.

துப்பாக்கி கலாச்சாரம்
இவன் உட்பட அங்கு இருக்கும் பல பசுக்காவலர்கள் வீட்டில் துப்பாக்கிகள் சர்வசாதாரணமாக புழங்கும் என்று ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண தெரு சண்டையில் கூட இவர்கள் துப்பாக்கியை தூக்கி காட்டி பிரச்சனை செய்வது, கோவில் விழாவில் வானத்தில் துப்பாக்கியால் சுடுவது என்று வாழ்ந்து வருவதாக அம்மக்கள் தெரிவிக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications