உ.பி.யில் பயங்கரம்: உறவுக்கு மறுத்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தன்னுடன் உறவு கொள்ள மறுத்த மனைவியை கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நாரியவால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜிவ் சர்மா. அவரது மனைவி மீனு சர்மா. அவர்களுக்கு 10 வயதில் மகன் ஒருவர் உள்ளார். ராஜிவுக்கும், மீனுவுக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ராஜிவ் தனது மனைவியை உறவு கொள்ள அழைத்தபோது அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ராஜிவ் தனது மனைவியை கொலை செய்துவிட்டு அவரது உடலின் அருகே அமர்ந்து 6 மணிநேரமாக மது அருந்தியுள்ளார். போலீசார் வந்து பார்த்தபோது மீனுவின் உடம்பில் சிறு காயம் கூட இல்லை ஆனால் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மீனு உறவு கொள்ள மறுத்ததும் அவரின் மர்ம உறுப்புக்குள் தனது வலது முழங்கையை விட்டதாகவும் அதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாகவும் ராஜிவ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
போலீசார் ராஜிவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் மீனுவின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications