சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதால் கோவிலை திறக்க முடியாது- உ.பி. மதுராவில் நூதன போர்க்கொடி
மதுரா: சானிடைசரில் ஆல்கஹால் கலந்து இருப்பதால் கோவில்களை திறக்க அனுமதிக்க முடியாது என உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களை இன்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதித்தது. இதனடிப்படையில் பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு உள்ள தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை. அதேநேரத்தில் ஹோட்டல்கள், மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

முதல்வர் வழிபாடு
உத்தரப்பிரதேசத்திலும் கோவில்கள், மசூதிகள் இன்று திறக்கப்பட்டன. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் கோவிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் காலையில் வழிபாடு செய்தார். கோவில்களில் முக கவசம் அணிந்தும் சமூக விலகலை கடைபிடித்தும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மதுரா கிருஷ்ணர் கோவில்
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் புகழ்பெற்ற மதுரா கிருஷ்ணர் கோவில் இன்று திறக்கப்படவில்லை. இதற்கு அவர்கள் கூறி இருக்கும் காரணம் வினோதமானது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சானிடைசரால் கைகளை கழுவ வேண்டும் என்கிற அரசு வழிகாட்டு நெறிமுறை. ஆனால் சானிடைசர், ஆல்கஹாலில் தயாரிக்கப்படுகிறது.

சானிடைர் ஆல்கஹால்
ஆல்கஹாலை பயன்படுத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெடும். ஆகையால் நாங்கள் கோவிலை திறக்கவில்லை என்கின்றனர் பிருந்தாவன், மதுரா கோவில் நிர்வாகத்தினர். இத்தனைக்கும் இந்த கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதுமான அளவு போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஜூன் 15-க்கு பின் திறப்பு
இருப்பினும் மதுராவின் பிற பகுதிகளில் கோவில்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஶ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரா கிருஷ்ணர் கோவில் வரும் 15-ந் தேதிக்குப் பின்னரே திறக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications