14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து செங்கல் சூளையில் எரித்த கொடூரம்
முசாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் செங்கல் சூளையில் எரிந்த நிலையில் கிடந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்து விட்டு விபத்து போல சித்தரித்துள்ளனர். இது தொடர்பாக ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூலித்தொழில் செய்தாலும் சந்தோசமாகவே நகர்ந்தது அவர்களின் வாழ்க்கை. செங்கல் சூளையில் வேலை செய்த அந்த தொழிலாளிக்கு மனைவி, மகன், மகள் என மகிழ்ச்சியாக நாட்கள் நகர்ந்தன. வெள்ளிக்கிழமையன்று மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறவே, அருகில் உள்ள கிராமத்தின் மருத்துவமனைக்கு போய் திரும்புவதற்குள் மகள் எரிந்து கரிக்கட்டையாக கிடந்தாள்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் முசாபர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். நடந்தது விபத்தாக இருந்தால் மகனுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது பெற்றோரின் வாதம். புகாரை பதிவு செய்த போலீசார் செங்கல் சூளை அதிபர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
என் மகள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை அதற்கான காரணமும் எதுவும் இல்லை என்று கூறும் பெற்றோர், மின்வசதி இல்லாத அந்த அறையில் தீப்பிடிக்கவும் வாய்ப்பு இல்லை என்று கண்ணீர் மல்க போலீசில் கூறினர். விபத்து போல செட்டப் செய்துள்ளனர். துணிகளைப் போட்டு எரித்துள்ளனர் என்றும் கூறினர். மகளை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளதாகவும், குற்றவாளிகளை காவல்துறையினர் தப்ப வைக்க முயற்சி செய்வதாகவும் கூறினர்.
சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி தீக்காயத்தினாலும் மூச்சுத்திணறல் காரணமாகவும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளின் மரணத்திற்கு முறையாக விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளைத் தப்பவைக்க முயற்சி செய்வதாகவும் சிறுமியின் தந்தை குற்றம் சாட்டினார்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications