For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி மீட்டிங்கிற்கு பள்ளி பஸ்கள்.. 8ம் வகுப்பு மாணவன் எதிர்ப்பு கடிதம்.. அடுத்து நடந்ததை பாருங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

போபால்: பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிக்காக பள்ளி பஸ்களை பயன்படுத்த கூடாது என மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 8வது படிக்கும் மாணவன் எழுதிய கடிதம் வைரலாகியுள்ளது.

பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தில் இன்று முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, அவரது நிகழ்ச்சிகளுக்கு தொண்டர்களையும், பொதுமக்களையும் அழைத்துவர மாநில அரசு நிர்வாகம், பள்ளி பஸ்களையும் பயன்படுத்துகிறது.

Upset over school buses for rally, boy wrote to PM

இதனால் கோபமடைந்த 8வது வகுப்பு மாணவன், தேவன்ஷ் ஜெயின் என்பவர், பிரதமருக்கே இதுகுறித்து புகார் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

வைரலான கடிதம்

மாணவனின் கடிதம், வட இந்திய மக்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கடிதம் குறித்து அறிந்த பிறகு மாநில அரசு எடுத்த நடவடிக்கைதான் கிளாஸ்.

பின்வாங்கிய அரசு

ஆம்.. மோடி நிகழ்ச்சிக்காக, பள்ளிகளில் இருந்து பஸ்களை பயன்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது மத்திய பிரதேச அரசு.

கடிதத்தில் கோபம்

தனது கடிதத்தில் தேவன்ஷ் ஜெயின் கூறியுள்ளதாவது: உங்களது பொதுக்கூட்டம் எனது பள்ளியை விட முக்கியமானதா?

அமெரிக்காவில் எப்படி வந்தார்கள்

அமெரிக்காவில் நீங்கள், மக்கள் கூட்டம் நடுவே உரையாற்றியதை நான் கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள் பள்ளி பஸ்சிலா கூட்டத்திற்கு வந்தார்கள்?

நான் உங்கள் ரசிகன்

நீங்கள் ரேடியோவில் பேசும் மன் கி பாத் நிகழ்ச்சியை நான் மிஸ் செய்வதேயில்லை. உங்களை பள்ளி தோழர்கள் யாராவது கேலி செய்தால் நான் அவர்களோடு சண்டை போட்டுள்ளேன்.

மாமாவிடம் சொல்லுங்க

எனவே, சிவ்ராஜ் மாமாவிடம் (ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்) பள்ளி பஸ்சளை கூட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று நீங்கள் சொல்லுங்களேன்.

வித்தியாசமானவர்

நீங்கள் காங்கிரஸ் தலைவர்களை போல இல்லை. கல்வி மற்றும் வருங்காலம் குறித்து உங்களுக்கு அக்கறை உள்ளது. இவ்வாறு மோடிக்கு மாணவன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Upset about having to miss school because his bus was to be used for Prime Minister Narendra Modi's rally today, a boy in Madhya Pradesh wrote to him: "Is your meeting more important than school?"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X