காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் மரணம்.. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க புல்லட்.. விசாரணையில் ஷாக்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் அமெரிக்காவை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது .
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாடா துரியன் நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. 6 ராணுவ வீரர்கள் பயணம் செய்து வந்த ராணுவ வாகனத்தில் திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்தியதோடு ராணுவ வாகனம் மீது கிரெனேட் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அந்த வாகனம் அங்கேயே தீ பிடித்து உள்ளது.
இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் அமெரிக்காவை சேர்ந்தவை ஆகும். அமெரிக்க படைகள் கடந்த வருடம் ஆப்கானிஸ்தானை விட்டு சென்ற போது அங்கே தாலிபானிடம் விட்டுவிட்டு வந்த தோட்டாக்கள் ஆகும் இவை.

அமெரிக்கா:இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் அமெரிக்காவை சேர்ந்தவை ஆகும். அமெரிக்க படைகள் கடந்த வருடம் ஆப்கானிஸ்தானை விட்டு விட்டு சென்ற போது அங்கே தாலிபானிடம் விட்டுவிட்டு வந்த தோட்டாக்கள் ஆகும் இவை.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியே செல்லும் போது அங்கே பெரிய அளவில் ராணுவ உபகரணங்கள், ஹெலிகாப்டர்களை கூட விட்டுவிட்டு சென்றது. இதை எல்லாம் தாலிபான்கள்தான் கைப்பற்றியது.
இதில் தாலிபான்கள் கைப்பற்றிய துப்பாக்கி தோட்டங்கள்தான் இந்த தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்னைப்பர் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் ஆகும் இவை.
தலிபான் அமைப்பிடம் இருந்து லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பிற்கு சென்று அங்கிருந்து ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பிற்கு இந்த தோட்டாக்கள் சென்று இருக்குமோ என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இருந்தாலும் சீனாவில் இருந்தும் இந்த தோட்டாக்கள் வந்து இருக்குமா.. அமெரிக்கா தோட்டாக்களை போலவே சீனாவின் தோட்டங்களும் இருக்கும் என்பதால் சீனாவின் தயாரிப்பாக இது இருக்குமா என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். அவர்கள் இந்திய ராணுவ வீரர்களின் ஆயுதங்களையும் சம்பவ இடத்தில் இருந்து தூக்கி சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் உள்ளூர் தீவிரவாதிகள் ஈடுபட்டனரா என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இது தொடர்பான தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எப்படி நடந்தது?:அங்கே ராணுவ வீரர்கள் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது.
பூன்ச் மாவட்டத்தின் ரஜோரி செக்டார் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பீம்பர் கலி மற்றும் பூஞ்ச் இடையே ராணுவம் வாகனம் சென்று கொண்டு இருந்த போது அங்கே மழை காரணமாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்துள்ளது.
இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கையெறி குண்டுகளை வீசியதால் ராணுவ வீரர்களால் தப்பிக்க முடியவில்லை.
ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள்தான் இந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு மூன்று பக்கங்களிலிருந்தும் நடத்தப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து கையெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் வீரர்களால் சுதாரிக்க முடியவில்லை.

ஆதாரங்கள்:எரிபொருள் டேங்கில் தீப்பிடித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் அங்கே கையெறி குண்டு விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஜெய்ஷ் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுவான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF - People's Anti-Fascist Front) எனப்படும் அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உடன் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை நடத்தினர். அங்கே தற்போது ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டு தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கே இதையடுத்து பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. அங்கே தீ பிடித்த ராணுவ வாகனத்தில் தற்போது ஆதாரங்களை வைத்து விசாரணை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications