பாயாசத்தை கணவனுக்கு போட்ட மனைவி.. ஒரே செகண்ட்டில் விழுந்தடித்து ஓடி.. கடைசியில் நடந்த செம டுவிஸ்ட்
கான்பூர்: மத்திய பிரதேச மாநில ஹனிமூன் கொலையின் அதிர்ச்சியே இன்னமும் நாட்டில் அடங்கவில்லை. அதற்குள் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஒரு பெண், தன் கணவரை கொலை செய்துள்ளார்.. இந்த அடுத்தடுத்த கொலைகளால், தங்களது மனைவிகளை நினைத்து, சில கணவன்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. இதனால் சில முடிவுகளையும் எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. அப்படி ஒரு சம்பவம்தான் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
கடந்த மே மாதம் ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் ஹனிமூனுக்காக சிரபுஞ்சிக்கு சென்றனர். ஆனால், தன்னுடைய கள்ளக்காதலனுக்கு கணவன் குறுக்கே இருப்பார் எனக்கருதி, மே 23 ந்தேதி, கணவரையே, கூலிப்படை வைத்து கொலை செய்திருந்தார் சோனம். இப்போது கொலையாளி சோனத்திடம் விசாரணை நடந்து வருகிறது.

அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி புத்தநாத் சிங் - சுனிதா.. இவர்களுக்கு 36 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 'புத்தநாத்தை சுனிதாவுக்கு பிடிக்கவில்லை.. இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லியும், வலுக்கட்டாயமாக கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், சுனிதா, கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து தந்தார். இதை சாப்பிட்டு புத்தாசிங் பரிதாபமாக இறந்துவிட்டார்.
சாப்பாட்டில் விஷம்
அதேபோல, உ.பி. மாநிலத்தை சேர்ந்த தம்பதி சுனில் - குஷ்பு தம்பதிக்கு மே 17ம் தேதி திருமணம் நடந்தது.. குஷ்புவுடன் , நைனிடாலுக்கு ஹனிமூன் போகலாம் என கனவில் இருந்தார்.
ஆனால், அதற்குள் தன்னுடைய காதலனுடனேயே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.. கணவருடன் வாழ பிடிக்கவில்லை, காதலனுடன்தான் வாழ போவதாக போலீஸில் சொன்னார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், காதலனுடனேயே மனைவியை அனுப்பி வைத்துவிட்டார். நல்லவேளை, ஹனிமூனில் உயிரிழந்த ராஜாவை போல தான் ஆகவில்லை.. உயிரோடு பிழைத்துவிட்டேன்" என்றும் கூறியிருந்தார்.
கூலித்தொழிலாளி குடும்பம்
இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. கோண்டா பகுதியை சேர்ந்த 42 வயது ஹரிஸ் சந்திரா கூலித்தொழிலாளி ஆவார்.. இவரது கரீஷ்மாவுக்கு 36 வயதாகிறது.. இவர்களுக்கு 15 வருடம் முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கரீஷ்மாவின் நடவடிக்கைகளில் மாற்றம் வந்துள்ளதை ஹரிஸ் சந்திரா கவனித்துள்ளார்.. இது தொடர்பாக தம்பதிக்குள் தகராறும் வெடித்து வந்துள்ளது..
இந்நிலையில், சம்பவத்தன்று ஹரிஸ் சந்திரா, வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு, வீட்டிலேயே மறைந்து கொண்டார்... பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில், கரீஷ்மா மட்டும் வீட்டில் இருந்துள்ளார்..
உல்லாசம் - திட்டம் தீட்டிய பெண்
அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவர் திடீரென கரீஷ்மாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.. இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளார்.. இதைக்கண்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தார்.. அதுமட்டுமல்ல, தன்னுடைய கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்ல போவதாகவும், காதலனுடன் சேர்ந்து கரீஷ்மா பிளான் போட்டு கொண்டிருந்தார்.
இதைக்கேட்டு நடுநடுங்கி போன ஹரீஷ் சந்திரா, அங்கிருந்து அமைதியாக வெளியே வந்துவிட்டார்.. பிறகு அன்றைய தினமே வேலை முடிந்து வீட்டுக்கு வருவதுபோல வந்தார் ஹரிஸ் சந்திரா.. உடனே கரீஷ்மாவும், தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வந்தார்..
ஊர் பஞ்சாயத்து
அதில் விஷம் கலந்திருப்பதை அறிந்த ஹரிஸ் சந்திரா, தட்டை வீசி எறிந்தார்.. உடனே ஊர் பஞ்சாயத்தை கூட்டி, நடந்த விஷயத்தையெல்லாம் பெரியவர்களிடம் சொன்னார். தொடர்ந்து தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், தன்னுடைய மனைவியை சிவராஜுக்கே திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார்.. அதே ஊர் பெரியவர்கள் முன்னிலையில், திருமணமும் செய்து வைத்தார்.
இந்த திருமணம் கட்டாயத்தின்பேரில் நடப்பதாக கரீஷ்மா குடும்பத்தினர் சொன்னார்களே தவிர, கரீஷ்மா சொல்லவில்லை.. தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு, காதலனுடன் கரீஷ்மா செல்ல, 2 மகன்களுடன் தன்னுடைய வீடு திரும்பினார் பரிதாப கணவர்...!!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications