சட்டசபை தேர்தல் வரலாற்றிலேயே.. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங்
நொய்டா: பாஜக வேட்பாளரும் நொய்டா எம்எல்ஏவுமான பங்கஜ் சிங் நொய்டா தொகுதியில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றுள்ளார்.
பாஜக சார்பாக உத்தர பிரதேச தேர்தலில் நொய்டா தொகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் இந்த முறை களமிறக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக அங்கு தீவிரமாக பிரச்சாரங்கள் செய்யப்பட்டடன.
மூத்த அமைச்சரின் மகன் என்பதால் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பலர் அங்கே சென்றனர். இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு நொய்டா மக்கள் போராட்டம் செய்தது தேர்தல் நேரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டம்
பங்கஜ் சிங்கிற்கு ஆதரவாக மனோஜ் திவாரி நொய்டாவில் பிரச்சாரம் செய்ய சென்றார். அப்போது அங்கு இருந்த போது மக்கள் மொத்தமாக கூடி பங்கஜ் சிங் மற்றும் மனோஜ் திவாரிக்கு எதிராக குரல் கொடுத்தனர். பாஜகவிற்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினர். பாஜக உள்ளே வர கூடாது. வெளியே செல்லுங்கள்.. இங்கே பிரச்சாரம் செய்ய கூடாது.. உங்களை அனுமதிக்க மாட்டோம் என்று அப்போது மக்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

பெண்கள் போராட்டம்
மனோஜ் திவாரியை உள்ளே விடாமல் அங்கே பெண்கள் சூழ்ந்து நின்றனர். அதோடு எம்பி மனோஜ் திவாரிக்கு எதிராக அங்கு இருந்த மக்கள் செருப்பை தூக்கி காட்டியதும் சர்ச்சையாகி உள்ளது. நொய்டாவில் உள்ள செக்டர் 17 என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தேர்தல் நேரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பங்கஜ் சிங் இதனால் தோல்வி அடைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதிக வாக்கு வித்தியாசம்
ஆனால் இப்போது அதே தொகுதியில் பாஜக வேட்பாளரும் நொய்டா எம்எல்ஏவுமான பங்கஜ் சிங் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் சட்டசபை தேர்தலில் ஒருவர் இவ்வளவு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வது இதுவே முதல்முறை. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும்.

எத்தனை வாக்குகள்
இங்கு பங்கஜ் சிங் மொத்தம் 70.84 சதவிகித வாக்குகளை பெற்றார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 16.42 சதவிகித வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் கட்சி 4.36 சதவிகித வாக்குகளை பெற்றது. இதற்கு முன் சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிராவில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான அஜித் பவார் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதுவே அதிக வாக்கு வித்தியாச வெற்றியாக இருந்தது.

முறியடிப்பு
அதை தற்போது பங்கஜ் சிங் முறியடித்துளார். இந்த தேர்தலில் 238867 வாக்குகளை பங்கஜ் சிங் பெற்றார். இவரை எதிர்த்து இரண்டாம் இடம் வந்த சமாஜ்வாதி வேட்பாளர் சுனில் சவுத்திரி வெறும் 61130 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் 177737 வாக்குகள் வித்தியாசத்தில் பங்கஜ் சிங் வென்று சாதனை படைத்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications