கொதிக்க கொதிக்க பால் பானைக்குள்.. குழந்தையை மூழ்கடித்து.. இந்த மூடநம்பிக்கைக்கெல்லாம் ஒரு அளவில்லையா
கான்பூர்: இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. இதைப்பார்த்து ஒட்டுமொத்த பொதுமக்களும் கடும் கோபத்திலும், ஆவேசத்திலும், ஆத்திரத்திலும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.. என்ன நடந்தது?
நம்முடைய நாட்டில் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் ஒருபக்கம் பெருகி வரும்நிலையில், மற்றொருபக்கம் மூடநம்பிக்கைகளும், அதே அளவுக்கு பெருகி கொண்டே வருகின்றன.

உடலில் நோய் பாதிப்பு வந்தாலும்கூட, டாக்டர்களிடம் செல்லாமல், மாந்திரீகத்தை நம்பும் அளவுக்கு மூடநம்பிக்கை மேலும் அதிகமாகிவிட்டது.. இந்த மூடநம்பிக்கைகள் சிதறி கிடப்பதால்தான், இது தொடர்பான குற்றங்களும் மலிந்து வருகின்றன..
மூட நம்பிக்கை: கடந்த வாரம்கூட ஒடிசாவில் ஒரு சம்பவம் நடந்தது.. 19 வயது இளம்பெண்ணின் அம்மா, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. அம்மா இறந்த பாதிப்பினால், இளம்பெண்ணுக்கு உளவியல் ரீதியான பாதிப்பு இருந்துள்ளது. அதனால், கடந்த 2021-ல் தன்னுடைய ஊரிலுள்ள ஒரு மந்திரவாதியை நாடியிருக்கிறார்.
அப்போதுதான் சிகிச்சை என்ற பெயரில், அந்த மந்திரவாதி, ஊசிகளை எடுத்து, ரேஷ்மா தலையில் குத்தினாராம்.. கடைசியில் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த ரேஷ்மா, கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.. இறுதியில் ஆபரேஷன் செய்து, ரேஷ்மாவின் தலையிலிருந்து மொத்தம் 77 ஊசிகளை டாக்டர்கள் அகற்றினார்கள்.
கொடுமை: ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்? இதோ இப்போதும் ஒரு கொடுமை உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது..
உத்தரப் பிரதேசத்தில் உள்ளது பலியா என்ற மாவட்டம்.. இங்குள்ள ஷ்ரவன்பூர் என்ற கிராமத்தில், சாமியார் ஒருவர் வசித்து வருகிறார்.. இவர் மாந்திரீகம் என்ற பெயரில் நிறைய சடங்குகளை செய்வாராம். அதனால், சுற்றுவட்டார மக்கள் இந்த சாமியாரிடம் வருவது அதிகரித்தவாறே உள்ளது.
சடங்குகள்: இப்படிப்பட்ட சூழலில், ஒரு பச்சிளம் குழந்தையை கொண்டு வந்து பூஜையும், சடங்கு முறைகளையும் செய்துள்ளார் அந்த சாமியார்.. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது..
அந்த வீடியோவில், கொதிக்கும் பால் பானைக்குள், பச்சிளம் குழந்தையை மூழ்கடிக்கிறார் சாமியார்.. பால் பானைக்குள் மூழ்கடித்த பிறகு, பூசாரி குழந்தையை தூக்கி, அதே சூடான பாலை தன் மீதும், குழந்தையின் மீதும் ஊற்றி கொள்கிறார்.. கொதிக்க கொதிக்க உடலில் பாலை ஊற்றியதுமே, அந்த பச்சிளம் குழந்தை வீல் என கதறி அழுகிறது.. இதனால் அந்த குழந்தை கதறி அழுகிறது.
கடும் கண்டனம்: இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியிருப்பதையடுத்து, பொதுமக்கள் பதறிப்போய்விட்டார்கள்.. கடுமையான கண்டனத்தை சாமியாருக்கு தெரிவித்து வருகிறார்கள்.. உடனே தூக்கி உள்ளே வைக்குமாறு கோபத்துடன் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுபோன்ற நடைமுறைகள் குழந்தைகளுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்பை தந்துவிடும் என்று பலரும் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வீடியோ வழக்கறிஞர் ஒருவர் கண்ணிலும் பட்டுள்ளது.. உடனே அவர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை (NCPCR) இதில் தலையிட வலியுறுத்தியுள்ளார்... இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்துகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையத்திடம் அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
மத சடங்கு: புனித நகரம் என்று அழைக்கப்படும் வாராணாசியை சேர்ந்த இந்த சாமியாரின் "மத சடங்கு" வீடியோ பொதுமக்களை கலங்கடித்து வருகிறது.
பொதுவாக கல்வியறிவு பெற்ற எந்தவொரு தேசமும், முன்னேறிய தேசமாகவே கருதப்படும்.. எந்த ஒரு மனிதனுக்கும் சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் உரிமையும் இருந்தாலே போதும்.. நிச்சயம் அவன் சார்ந்து வாழும் சமுதாயம் எழுச்சி பெற்றுவிடும்..!
ஆனால், வடமாநிலங்களிலுள்ள பெரும்பாலான கிராமங்களில் கல்வி இன்றளவும் மறுக்கப்படுகிறது.. மறக்கடிக்கப்படுகிறது.. மறைக்கப்படுகிறது.. இந்த விஷயத்தை, இனியாகிலும் சீரியஸாக நாம் அணுக வேண்டி உள்ளது.. "அறியாமை" என்னும் பெயரில் பச்சிளம் குழந்தைகளையெல்லாம் இனியும் காவு கொடுக்க முடியாது..!












Click it and Unblock the Notifications