ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் மிரட்டல் கடிதம் எழுதிய கடத்தல் கும்பல்.. குழம்பி நின்ற அண்ணன்! சபாஷ் போலீஸ்
கான்பூர்: உங்கள் தம்பியை விடுவிக்க வேண்டுமானால், நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்ற மிரட்டல் கடிதம் வந்ததை கண்டு, அண்ணன் அதிர்ந்துபோய்விட்டார். இதையடுத்து, இந்த கடிதத்துடன் போலீசுக்கு ஓடினார்.. அங்கே என்ன நடந்தது ?
உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ளது பண்டாரஹா என்ற கிராமம்... இங்கு வசித்து வருபவர் சஞ்சய் குமார்... கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரர் சந்தீப்.. 27 வயதாகிறது..

சமீபத்தில், சஞ்சய் குமாருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.. அந்த கடிதத்தில், "உங்கள் தம்பி சந்தீப்பை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவரை உங்களிடம் விடுவிக்க வேண்டுமானால், 50,000 ரூபாய் உடனடியாக தர வேண்டும். இல்லாவிட்டால் அவரை கொன்றுவிடுவோம்" என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
நாற்காலி : இந்த கடிதத்தை பார்த்ததுமே சஞ்சய் குமார் அதிர்ந்துபோனார்.. பிறகு, சிறிதுநேரத்தில் சஞ்சய்குமாரின் செல்போனுக்கு ஒரு வீடியோவும் வந்தது... அதில், ஒரு நாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சந்தீப் பதற்றத்துடன் காணப்பட்டார்.. இதனால், சஞ்சய்குமார் என்ன செய்வதென்றே தெரியாமல் போலீசுக்கு ஓடினார். தனக்கு யாருடனும் இதுவரை முன்விரோதம் கிடையாது என்றும், யாரிடமும் இதுவரை கடன்வாங்கியதுகூட கிடையாது என்றும் போலீசில் கூறினார்.
போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையை மேற்கொண்டனர். உண்மையிலேயே, சஞ்சய்குமாருக்கு யாருடனும் தகராறு, சண்டை, முன்விரோதம் எதுவுமே கிடையாது என்பதை உறுதி செய்துகொண்டனர். ஆனால், ஒருநபரை கடத்தி கொண்டுபோய் வைத்து கொண்டு, வெறும் 50 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்களே? என்று போலீசாருக்கு சந்தேகம் வந்தது.
மிரட்டல் கடிதம்: அதனால், சஞ்சய் குமாருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை படித்தபோதுதான், அதில், "கொலை" என்ற ஆங்கில வார்த்தையில் எழுத்துப்பிழை இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்... பிறகு, மிரட்டல் வீடியோ அனுப்பப்பட்டிருந்த சந்தீப்பின் செல்போன் நம்பரை கொண்டு, அவரது இடத்தை டிராக் செய்தனர்.
ருபாபூர் என்ற இடத்தில், செல்போன் டவர் காட்டியதால், அங்கு விரைந்து சென்றனர்.. ஆனால், சந்தீப் மட்டுமே இருந்தார், அவருடன் வேறு யாருமே கடத்தல்காரர்கள் இல்லை.. எனவே, போலீசாருக்கு சந்தீப் மீது மேலும் சந்தேகம் எழுந்தது.. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "என்ன நடந்தது? யார் கடத்தியது? கடத்தல் சம்பவம் குறித்து ஒரு பேப்பரில் எழுதி தரும்படி போலீசார் கேட்டனர்.
அதே எழுத்துப்பிழை: உடனே சந்தீப்பும் கடகடனவென கடத்தல் சம்பவம் குறித்து எழுதினார்.. சஞ்சய் குமாருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், கொலை என்ற வார்த்தையில் எழுத்துப்பிழை இருந்தது போலவே, சந்தீப் எழுதிய அதே வார்த்தையில், அதே எழுத்துப்பிழை இருந்தது... இதற்கு பிறகு, சந்தீப்பை உரிய முறையில் போலீசார் விசாரித்தபோது, மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார்.
அதாவது, மிர்சாபூரில் உள்ள கரும்பு கொள்முதல் மையத்தில் வேலை பார்த்து வருகிறாராம் சந்தீப்.. கடந்த 30ம் தேதி சஹாபாத் என்ற இடத்தில், பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, முதியவர் மீது தெரியாமல் மோதிவிட்டாராம்.. இதில் முதியவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.. இதனால் சந்தீப்பிடம் முதியவர் தரப்பில் இழப்பீடு கேட்டுள்ளதாக தெரிகிறது.. இந்து இழப்பீடு பணம் 50 ஆயிரம் தன்னிடம் இல்லாததால்தான், அண்ணனை ஏமாற்ற முடிவு செய்தாராம்.
கைது: எனவே, 50 ஆயிரம் பணத்துக்காக ஏமாற்றி, தனக்குதானே தன்னை கடததல் நாடகமாடியதாக சந்தீப் சொன்னார்.. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications