பிற்பகல் 3 மணி நிலவரம்.. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் 49.24 சதவீதம் வாக்குகள் பதிவு!
டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபைக்கு ஒரே கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49. 24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
Recommended Video
உத்தரகாண்டில் 13 மாவட்டங்களில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 632 வாக்காளர்கள் போட்டியிடுகிறார்கள். 81 லட்சம் வாக்காளர்கள் தகுதியானவர்களாக அறியப்படுகிறார்கள்.
2000 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உருவான பிறகு நடக்கும் 5 ஆவது சட்டசபை தேர்தல் இதுவாகும். இங்கு முதல்வர் புஷ்கர் சிங் தமி, அமைச்சர்கள் சத்பால் மகாராஜ், சுபோத் உனியால், அரவிந்த் பாண்டே, தன் சிங் ராவத், ரேகா ஆர்யா, பாஜக தலைவர் மதன் கவுசிக் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலில் போட்டியிடும் பிரபலங்கள் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், முன்னாள் அமைச்சர் யாஷ்பால் ஆர்யா, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கணேஷ் கோடியால், எதிர்க்கட்சித் தலைவர் பிரீத்தம் சிங் உள்ளிட்டோர் ஆவர்.
உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றியுள்ளது பாஜக. திராத் சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் ஆகியோருக்கு பின்னர் 3 ஆவது முதல்வராக புஷ்கர் சிங் தமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் தமி, ஆம் ஆத்மி சார்பில் கலோனல் அஜய் கோதியால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். இவரது பின்புலம் மற்றும் மக்களிடம் நன்மதிப்புடன் ஆம் ஆத்மி தேர்தலை சந்திக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ள பாதிப்பின் போது மறுசீரமைப்பிற்காக இவர் முக்கிய பங்காற்றினார்.
முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் இதுவரை முடிவு செய்யவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரகாண்டில் 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் பாஜக வென்றது. காங்கிரஸ் வெறும் 11 தொகுதிகளில் வென்றது. சுயேச்சை வேட்பாளர்கள் இருவர் வென்றனர். உத்தரகாண்ட் சட்டசபையின் பெரும்பான்மை பலம் 36 ஆகும். பாஜக, காங்கிரஸ் மட்டுமல்லாமல் ஆம் ஆத்மியும் உத்தரகாண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
70 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது ஆம் ஆத்மி. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மக்களின் தேவைகளை காங்கிரஸும் பாஜகவும் பூர்த்தி செய்யவில்லை என ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சாரங்களில் குற்றம்சாட்டியுள்ளது. 8.624 இடங்களில் 11,697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்முறையாக 101 வாக்குச்சாவடிகளில் பெண்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் இந்த வாக்குச் சாவடிகளுக்கு சகி என பெயரிடப்பட்டுள்ளது. அது போல் மாற்றுத் திறனாளிகளாக உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருக்காக 6 வாக்குச் சாவடிகள் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
11 மணி நிலவரப்படி உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கான தேர்தலில் 18.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி உத்தரகாண்ட் சட்டசபைக்கான தேர்தலில் 35.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி உத்தரகாண்ட் சட்டசபைக்கான தேர்தலில் 49.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications