மாற்றி யோசித்த பிச்சைக்கார பெண்.. இப்போ கையில் குவியல் குயிலாக பணம்.. எல்லாமே நேர்மையாக சேர்த்தது!
டேராடூன்: இந்தக் காலத்தில் நம்மில் பலரும் சேமிப்பிற்குப் பணம் பற்றவில்லை எனப் புலம்பி வருகிறோம். ஆனால், எவ்வளவு குறைவான வருமானம் இருந்தாலும் பணத்தைச் சேமிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி சிறுகச் சிறுக ஒரு லட்சத்திற்கு மேல் சேர்த்து வைத்துள்ளாராம். அவர் எப்படி இதைச் சேர்த்தார்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
பிச்சை எடுத்து வாழும் எல்லாருமே ஏழ்மை இருப்பார்கள் என்பதே நமது நிலைப்பாடு. யாசகம் கேட்போரின் பெரும்பாலானோரின் நிலை இதுதான் என்றாலும் சிலர் பிச்சை எடுத்தே வீடு, சொத்து எல்லாம் வாங்கியுள்ளனர். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது..

பணத்தைச் சேமித்த மூதாட்டி
உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கி நகரில், கடந்த 10 ஆண்டுகள் மேலாக மூதாட்டி ஒருவர் சாலையோரம் பிச்சை எடுத்து வசித்து வந்துள்ளார். அந்தப் பெண் அங்குப் போவோர் வருவோரிடம் சில்லறையை வாங்கி, வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு எந்தவொரு சொத்து அல்லது சேமிப்பும் இல்லை என்றே மக்கள் கருதியுள்ளனர்.
இதன் காரணமாகவே மக்கள் அவருக்கு உதவி வந்துள்ளனர். ஆனால், அவரிடம் பெரிய தொகை சேமிப்பாக இருந்தது தெரிய வந்தபோது அந்தப் பிம்பம் முற்றிலும் தகர்ந்தது. அதாவது அந்த மூதாட்டி இத்தனை ஆண்டுகள் சேகரித்த பணத்தை மெல்லச் சேமித்து வந்திருக்கிறார். இப்படி 12 ஆண்டுகளில் அந்தப் பெண் இரண்டு பைகள் முழுக்க நாணயங்கள், ரூபாய் நோட்டுகளைச் சேகரித்துள்ளார்.
பை முழுக்க பணம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அந்த மூதாட்டியின் இரண்டு பை முழுக்க நாணயங்கள் மற்றும் நோட்டுகள் இருந்ததைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மூதாட்டியிடம் இப்படிக் குவியல் குவியலாகப் பணம் இருப்பதைப் பார்த்தவுடன், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பணத்தை எண்ண ஆரம்பித்துள்ளனர்.
பணத்தை எண்ணும் பணிகள்
அதிகாலையிலேயே பணத்தை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது. அவரிடம் இருந்தது எல்லாமே நாணயங்கள் மற்றும் சிறு மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள்.. இதனால் பணத்தை எண்ணும் பணிகள் இரவு வரை தொடர்ந்துள்ளது.. இதுவரை ₹1 லட்சத்திற்கும் மேல் எண்ணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டவுடன் அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். எந்தவொரு சொத்தும், செல்வமும் அந்த மூதாட்டிக்கு இல்லை என மக்கள் நினைத்த நிலையில், அவரும் கூட பணத்தைச் சேமித்திருக்கிறார்.
பின்னர், அந்த மூதாட்டியிடம் இருந்த பணத்தை வாங்கிய போலீசார், அதைப் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும், மூதாட்டிக்கு மருத்துவச் சிகிச்சை தரவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். நீண்டகாலத் தனிமை காரணமாக அவருக்கு மனநலப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேமிப்பு முக்கியம்
பொருளாதார வல்லுநர்கள் சேமிப்பை வலியுறுத்தி வரும் நிலையில், நம்மில் பலரும் அதைச் செய்யாமல் இருக்கிறோம். கேட்டால் வருமானம் பற்றவில்லை என்போம். ஆனால், பிச்சை எடுக்கும் மூதாட்டி கூட சிறுக சிறுக ரூ.1 லட்சத்திற்கும் மேல் சேர்த்துள்ளார். இது சேமிப்பிற்கும் வருமானத்திற்கும் தொடர்பில்லை என்பதையே காட்டுகிறது. அதிக வருமானம் இல்லாவிட்டாலும், சீரான ஒழுக்கமே செல்வம் சேர்ப்பதற்கான சாவி என்பதைப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மிகக் குறைந்த வசதிகளுடன் இருந்தபோதிலும், இந்த மூதாட்டி பல ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் இந்தப் பணத்தைச் சேமித்து வைத்துள்ளார். எவ்வளவு வறுமை இருந்தாலும் மிகச் சிறிய தொகையைச் சேமித்தாலும் கூட அது காலப்போக்கில் பெரிய பணமாக மாறும் என்பதையே இது காட்டுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications