உணவில் எச்சில் துப்பினால் 1 லட்சம் வரை அபராதம்.. சிறை தண்டனை.. உபி பாணியில் உத்தரகாண்ட் அரசு முடிவு
டேராடூன்: "உணவில் எச்சில் துப்புதல்" சம்பவங்களை தடுக்க உத்தரப்பிரதேச அரசு பாணியில் உத்தரகாண்ட் மாநிலமும் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முசோரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பழச்சாறில் எச்சில் துப்பிய சம்பவத்தை அடுத்து, கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி உணவில் எச்சில் துப்புதல் சம்பவத்தில் ஈடுபடுவோருக்கு 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச உணவகங்களில் சமைக்கும் போது உணவில் எச்சில் துப்பப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, உணவகங்களில் சிசிடிவி நிறுவ வேண்டும். உணவில் எச்சில் துப்பினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த சில மாதம் முன்பு உத்தரவு பிறப்பித்தது. அதே பாணியில் உத்தரகாண்டிலும் பாஜக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பழச்சாறில் எச்சில் துப்பிய இரண்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இதே போல் மற்றொரு சம்பவம் டேஹ்ராடூனில் நடந்துள்ளது. ரொட்டிக்கு மாவை தயார் செய்யும் போது சமையல்காரர் அதன் மீது எச்ச்சில் துப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த உத்தரகாண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தன் சிங் ராவத், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தூய்மையே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகள் என்றார். உத்தரகாண்டை பொறுத்தவரை எந்தவிதமான தூய்மையற்ற அல்லது உணவு விஷயத்தில் எந்த விதமான சமூக விரோதச் செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் கடுமையாக எச்சரித்தார்.
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறும் போது, இதுபோன்ற செயல்களை "தூக் (துப்பி) ஜிஹாத்" என்று கடுமையான தொனியில் குறிப்பிட்டார். அத்துடன் மாநில காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைகள் மூலம் இதற்கு என தனித்தனி வழிகாட்டுதல்கள் வெளியிட உத்தரவிட்டார். அதன்படியே வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.
இது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹோட்டல்கள் மற்றும் தாபாக்களில் உள்ள ஊழியர்களின் விவரங்களை 100 சதவீதம் காவல்துறை சரிபார்க்க வேண்டும். உணவகங்களில் சமையலறைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதை கட்டாயப்படுத்த வேண்டும்.
நடமாடும் உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் உள்ளிட்ட திறந்த வெளி உணவகங்களில் சோதனை செயய உள்ளூர் புலனாய்வுப் பிரிவுகளைப் பயன்படுத்துமாறு மாவட்ட காவல்துறைக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவில் கலப்படம் செய்தது உறுதியானால், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 274 மற்றும் உத்தரகாண்ட் காவல் சட்டம் பிரிவு 81 இன் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த சட்டப்பிரிவில் கைதானால் 6 மாதம் சிறை தண்டனையும் 5000 அபராதமும் விதிக்கப்படும்.
ஒரு செயல் மதம், இனம் அல்லது மொழியை எதிர்மறையாக பாதிக்கிறது என்றால், 196(1)(B) (பகைமையை ஊக்குவித்தல்) அல்லது பாரதிய நியாய சன்ஹிதாவின் 299 (மத நம்பிக்கைகளை அவமதிப்பது) போன்ற தொடர்புடைய பிரிவுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் டிஜிபி வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications