அவர் வேண்டாம்.. குடும்ப அரசியல் என்று சொல்லிடுவாங்க.. தம்பி மகனை புகைப்படத்தில் தவிர்த்த வைகோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தன்னுடைய தம்பி மகனுடன் புகைப்படம் எடுப்பதை தவிர்த்த வைகோ-வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த நிகழ்வு ஒன்றில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன்னுடைய தம்பி மகனுடன் புகைப்படம் எடுப்பதை தவிர்த்து இருக்கிறார். இதற்கு அவர் வித்தியாசமான விளக்கம் அளித்தும் இருக்கிறார்.

    Vaikos video on family politics gets viral in social media

    கேரளாவில் உள்ள அரசியல் தலைவர்களை சந்தித்து, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இதற்காக அவர் நேற்று கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அதில் நியூட்டிரினோ திட்டம் குறித்து அவரிடம் எடுத்துரைத்தார்.

    அதன்பின் கேரளா சட்டசபையின் எதிர்கட்சித்தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ரமேஷ் சென்னிதலாவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது தன்னுடைய துணைக்கு தன் தம்பி மகனை அழைத்து சென்று இருந்தார்.

    அப்போது நடந்த நிகழ்வில் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் வைகோ, தன்னுடைய தம்பி மகனுடன் புகைப்படம் எடுப்பதை தவிர்த்து இருக்கிறார். இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், அவர் வேண்டாம் அவர் கூட போட்டோ வேண்டாம், அப்பறம் குடும்பம் அரசியல் என்று சொல்லிவிடுவார்கள் என்று கூறினார். இது புரியாமல் ரமேஷ் சென்னிதலா விளக்கம் கேட்டார். அதற்கு வைகோ ஆங்கிலத்தில் அவருக்கு விளக்கம் அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+