வாரணாசியில் பரம எதிரியான காங். வேட்பாளருக்கு ஆதரவு- முக்தர் அன்சாரி திடீர் அறிவிப்பால் பரபரப்பு!!

லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதே வாரணாசி தொகுதியில் கடந்த லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் முக்தர் அன்சாரி. அவர் பாஜக வேட்பாளரான முரளி மனோகர் ஜோஷியிடம் சில ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்திருந்தார்.
இதனால் இந்த தொகுதியில் முக்தர் அன்சாரி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாபியா கும்பலைச் சேர்ந்த அன்சாரி தற்போது குவாமி ஏக்தா மஞ்ச் என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
மேலும் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கியுள்ள அஜய் ராயின் சகோதர் அவ்தேஷ் ராயை போட்டுத் தள்ளியவர் முக்தர் அன்சாரி. அதனால் அவர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காமல் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆதரிக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தாம் அஜய் ராயை ஆதரிப்பேன் என்று முக்தர் அன்சாரி அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நரேந்திர மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுக்காகவே அஜய் ராயை தாம் ஆதரிப்பதாக முக்தர் அன்சாரி அறிவித்துள்ளார்.
முக்தர் அன்சாரியின் இந்த அறிவிப்பு நரேந்திர மோடி மற்றும் கேஜ்ரிவால் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications