வக்பு மசோதா: இஸ்லாமியர் சொத்துகளை அபகரிக்கும் சதி- பாசிச தாக்குதல்- லோக்சபாவில் 'சீறிய' திருமாவளவன்
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று நிறைவேறிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, இஸ்லாமியர்களின் சொத்துகளை அபகரிக்கும் சதித் திட்டமாகும்; சிறுபான்மையினர் மீதான பாசிசத் தாக்குதல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கடுமையாக சாடினார்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் வக்பு மசோதா மீதான விவாதத்தில் தொல்.திருமாவளவன் எம்பி பேசியதாவது: இந்த வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை முற்றாக நான் எதிர்க்கிறேன். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாக எதிர்க்கிறேன்.
இஸ்லாமியர் சொத்துகளை அபகரிக்க சதி
இந்த மசோதா இஸ்லாமியர்களின் சொத்துக்களை முற்றாக அபகரிப்பதற்கான ஒரு சதி முயற்சியாகவே தெரிகிறது. இஸ்லாமியர்கள், இஸ்லாமியர்களின் நலன்களுக்காக உருவாக்கிக் கொண்ட வக்ஃப் சொத்து,இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படுவதுதான் நீதியாகும். ஆனால், அதற்கென உருவாக்கப்பட்டு இருக்கிற நிர்வாகக் குழுவில் இசுலாமியர்கள் அல்லாதவர்களை வாரியத்திலே 11பேரில் ஏழு பேரையும் Central council என்கிற அகில இந்திய அளவிலான அவையில் 22பேரில் 12 பேரையும் நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பை இந்த சட்ட மசோதா வழங்குகிறது. இது எந்த வகையிலான நீதியாக இருக்க முடியும்.?

இஸ்லாமியர்கள் மீதான உங்கள் வெறுப்பு அரசியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஒரு பாசிசத் தாக்குதலாகத் தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள், ஏற்கனவே பாபர் மசூதியை இடித்தீர்கள், ஏற்கனவே ஜம்மு காஷ்மீரை சிதைத்தீர்கள், இன்றைக்கு இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அரசியலை நீங்கள் விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது வலதுசாரி பெரும்பான்மைவாத பாசிசத் தாக்குதல் என்று நான் சுட்டிக்காட்டி வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இஸ்லாமியரிடையே பிரிவினை
மேலும், இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஆகாகான்களுக்கு தனி வக்ஃப் வாரியம் என்றும், ஷியா முஸ்லிம்களுக்கு தனி வக்ஃப் வாரியம் என்றும் போரா முஸ்லிம்களுக்கு தனி வக்ஃப் வாரியம் என்றும் நீங்கள் அறிவித்திருப்பது மிக மோசமான பாசிசத் தாக்குதல் ஆகும்.
எப்படி இந்துக்களை சாதியின் பெயரால் சாதி பெருமிதங்களை பேசி அவர்களை கூர்மைப்படுத்துகிறீர்களோ, குறிப்பாக பட்டியல் சமூகத்து மக்களை தனித்தனி குழுக்களாக உடைத்திருக்கிறீர்களோ. அதுபோல இஸ்லாமிய சமூகத்தையும் இன்றைக்கு பிளவுப்படுத்துகிற சமூகப் பிரிவினை வாதத்தை உயர்த்திப்பிடிக்கிறீர்கள். இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாக நான் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
சிறுபான்மை அமைச்சர் ரிஜிஜூ
இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பௌத்தராக இருக்கிற ரிஜிஜு என்கிற அமைச்சரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். சனநாயகத்தை கொன்று புதைப்பதற்கு சனநாயக வடிவத்தை கையில் எடுக்கிறீர்கள். அதுபோல இஸ்லாமியர்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஒரு அமைச்சரை பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வக்பு மசோதா: இஸ்லாமியர் சொத்துகளை அபகரிக்கும் சதி- பாசிச தாக்குதல்- லோக்சபாவில் 'சீறிய' திருமாவளவன்புத்தகயாவில் மகா போதி கோவிலில் புத்திஸ்ட் அல்லாதவர்களை உறுப்பினர்களாக வைத்திருக்கிறார்கள். அதை எடுக்கச் சொல்லி பௌத்த பிக்குகள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு அதைக் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இப்படி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தக் கூடிய வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நகைச்சுவையாக இங்கே பேசுகிறார் "காங்கிரசும் காங்கிரசின் கூட்டணி கட்சிகளும் தான் இஸ்லாமியர்களை வாக்கு வங்கிக்காக அச்சுறுத்துகிறீர்கள்" என்று ஒரு நியாயஸ்தரை போல இங்கே நடித்துக்காட்டுகிறார். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவன்மையாகக் கண்டிக்கிறது.
சாவர்க்கரின் கனவை நனவாக்குவதற்காக சாவர்க்கரின் தொண்டர்களாக இருக்கின்ற இன்றைய ஆட்சியாளர்கள் இசுலாஸ்யர்களை சீர்குலைக்கிற, கிறித்தவர்களை நசுக்குகிற, பௌத்தர்களை சமணர்களை சீக்கியர்களை அச்சுறுத்துகிற வகையிலே இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது, மத நல்லிணக்கத்திற்கு எதிரானது, புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதனால் இந்த சட்ட மசோதாவை நான் மிகவன்மையாக எதிர்க்கிறேன். இதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications